Vettaiyan deleted scene: பேட்டரி சார் நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க.. வேட்டையன் டெலிட்டட் சீன் இதோ!

சென்னை: லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையின் திரைப்படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை தற்போது தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தில் ஃபேட்ரிக் கதாபாத்திரத்தில் பகத் ஃபாசில் அடிபொலி நடிப்பை கொடுத்துள்ளார்.

பேட்டரி என பகத் ஃபாசிலை சூப்பர் ஸ்டார் அழைக்கும் இடங்கள் மற்றும் பகத் ஃபாசிலின் ஹியூமர் டைமிங் சென்ஸ் தான் ஒரு கனமான கதை ஓடிக் கொண்டிருக்கும் போதும் ரசிகர்களை சிரிக்க வைக்க உதவியது.

chennai rains vettaiyan rajinikanth

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் பகத் ஃபாசில் இருவரும் ஜாலியாக பேசிக் கொள்ளும் காட்சியை படத்தில் இருந்து நீக்கிய நிலையில், தற்போது அதனை லைகா நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் சேதுபதி போல: தமிழில் விஜய் சேதுபதி மற்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் தனது நடிப்பால் தரமான சம்பவம் செய்து விடுவார். அவரை போலவே மலையாள நடிகரான பகத் ஃபாசில் தென்னிந்திய படங்களில் அசத்தி வருகிறார். விக்ரம், மாமன்னன் படங்களை தொடர்ந்து வேட்டையன் படத்திலும் மிரட்டியிருக்கிறார் பகத் ஃபாசில். பாலிவுட்டுக்கு சென்றால் இவருக்கு வேறலெவல் வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை கவர்ந்த பேட்டரி: ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவேன் என்பதில் ஆரம்பித்து துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பெண்களிடம் கடலை போடுவது போல பேசி தனக்கு தேவையான விஷயங்களை சாதித்துக் கொள்ளும் இடங்களிலும் ஒன் லைனர் காமெடி மூலமாக படம் பார்க்க வரும் ரசிகர்களை கடைசி வரை சிரிக்க வைத்து ஸ்கோர் செய்துள்ளார்.

அந்த சீனில் அதிர்ச்சி: கிளைமேக்ஸ் நெருக்கத்தில் பேட்டரிக்கு ஏற்படும் ஒரு விஷயம் ரசிகர்களை தியேட்டரில் அதிர்ச்சியடைய செய்கிறது. அதன் பின்னர் வரும் காட்சிகள் தான் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெலிடட் சீன்: இந்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் பகத் ஃபாசில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது இனிமேல் தன்னுடன் பேட்டரி வேலை செய்ய வேண்டாம் அவருடைய உயிருக்கு ரிஸ்க் இருக்கும் என ரஜினிகாந்த் எச்சரிக்க, உங்க கிட்ட வேலை செய்யல என்றால் திருடனாகவே மாறிவிடுவேன் என்கிறார் பேட்டரி. நல்லா நடிக்கிற பேட்டரி என ரஜினிகாந்த் பகத் ஃபாசிலை பார்த்து கலாய்க்க, உங்களை விடவா என பதிலுக்கு ரஜினியை பார்த்து பகத் ஃபாசில் கலாய்க்கும் காட்சிகள் டெலிட்டட் சீனாக வெளியாகி உள்ளன.

குறுக்கே வந்த மழை: வேட்டையன் படம் தியேட்டர்களில் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த நிலையில், குறுக்கே இந்த கெளஷிக் வந்தால் என்ன பண்ணுவ என விஜய் ரசிகர்களை விட மோசமாக வேட்டையன் படத்தின் வசூலுக்கு கன மழை மற்றும் ரெட் அலர்ட் பெரும் சிக்கலை உருவாக்கி விட்டது. அடுத்த 5 நாட்கள் மழை நீடித்தால் வேட்டையன் படத்தின் தியேட்டர் வசூல் அப்படியே முடங்கிவிடும் நிலை ஏற்படும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. இந்த வாரம் 5 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X