தமிழ்நாட்டை உலுக்கிய உண்மை சம்பவம்.. வேட்டையன் பட இயக்குநரின் அடுத்த படம்.. பூகம்பங்கள் கிளம்பலாம்

சென்னை: ஜெய் பீம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான த.செ.ஞானவேல் அந்தப் படத்திலேயே தனக்கான சிறந்த பெயரை பெற்றுக்கொண்டார். அடுத்ததாக அவர் இப்போது ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அக்டோபர் பத்தாம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தச் சூழலில் த.செ.ஞானவேலின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சூர்யா நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்தப் படத்தை பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இருளர் இன மக்கள் பற்றி அதுவரை தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்படாத சூழலில் அந்தப் படத்தில் காத்திரமாகவே பேசி; காவல் துறையினர் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் முகமூடியை கிழித்தெறிந்தார் இயக்குநர். படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யாவின் நடிப்பும், ஞானவேலுவின் இயக்கமும் பெரிதும் கொண்டாடப்பட்டன.

vettaiyan rajinikanth tj gnanavel

முக்கியமான இயக்குநர்: தான் இயக்கிய ஒரு படத்திலேயே தன்னை ஒரு முக்கியமான இயக்குநராக கோலிவுட்டில் நிறுவிக்கொண்டார் ஞானவேல். ஜெய் பீமை முடித்துவிட்டு அடுத்து என்ன படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில்; பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது அவர் ரஜினியுடன் அமைத்த கூட்டணி. லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஞானவேல்.

வேட்டையன் ரிலீஸ்: இந்தப் படமானது உண்மையில் நடந்த போலி என்கவுன்ட்டரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்த படத்தின் பணிகள் முடிந்து படம் இப்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. ஜெய் பீம் என்ற சென்சேஷனல் படத்தை கொடுத்த இயக்குநருடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: முக்கியமாக ரஜினிக்காக தனது ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கில் ஞானவேல் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறாரா என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். அதேசமயம் சமீபத்தில் வெளியான வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிளான மனசிலாயோ பாடலை பார்க்கையில் கண்டிப்பாக கொஞ்சமேனும் ஞானவேல் ரஜினிக்காக சமரசம் ஆகியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது என்று திரை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அந்த மனசிலாயோ பாடலில் மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: இந்நிலையில் வேட்டையன் படத்தை முடித்த பிறகு ஞானவேலுவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சரவணபவன் ஹோட்டல் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக வைத்து தோசா கிங் என்ற படத்தை இயக்கவிருக்கிறார் அவர்.ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்துக்கு ஞானவேலுவுடன் சேர்ந்து ஹேமந்த் ராவ் என்பவர் திரைக்கதை எழுதுகிறார்.

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்: இப்போது ஃபேமஸாக இருக்கும் சரவண பவன் ஹோட்டலின் நிறுவனர்தான் ராஜகோபால். அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தார்கள். இருந்தாலும் ஜோதிடத்தின் மீது மூடத்தனமான நம்பிக்கை கொண்ட ராஜகோபால் தனது ஆஸ்தான ஜோதிடரின் பேச்சை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். நீங்கள் இன்னொரு திருமணம் செய்துகொண்டால் மேலும் புகழும், பணமும் சேரும் என்று சொன்னதை நம்பி; தனது ஹோட்டல் மேலாளரின் மனைவி ஜீவஜோதி என்பவரை திருமணம் செய்ய விரும்பினார்.

ஆனால் அதற்கு ஜீவஜோதியும், அவரது கணவரும் சம்மதிக்கவில்லை. அந்த சமயத்தில் ஜீவஜோதியின் கணவரும் காணாமல் போனார். அவரை ராஜகோபால்தான் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பிறகு ராஜகோபாலுக்கு எதிராக பெரும் சட்டப்போராட்டம் நடத்தி ஜீவஜோதி வென்றார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதனை மையப்படுத்திதான் தோசா கிங்கை ஞானவேல் உருவாக்கவிருப்பதால் புதிய பூகம்பங்கள் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X