என்கவுன்ட்டர் மட்டுமில்லை.. வேட்டையன் கதையே வேறயாம்.. ஜெய்பீம் இயக்குநர் சம்பவம் கன்ஃபார்ம்!

சென்னை: வேட்டையன் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரில் பெரிதாக இயக்குநர் த.செ. ஞானவேல் கதையை ரிவீல் செய்யாமலே உள்ளார் என்றும் படத்தை பார்க்கும்போது தான் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பது தெரிய வரும் என தகவல்கள் கசிந்துள்ளன.

லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த வாரம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

vettaiyan rajinikanth tj gnanavel

வேட்டையன் படத்தின் டிரெய்லரில் கூட ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இடையே வரும் என்கவுன்ட்டர் பற்றிய விவாதங்கள் தான் அதிகம் இடம்பெற்று இருந்தன. ஆனால், மெயின் வில்லனான ராணா டகுபதி மற்றும் ரஜினிகாந்த் இடையேயான கிளாஷை காட்டவே இல்லை. இந்நிலையில், கதை குறித்த சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளன.

வேட்டையன் கதை இதுதானா?: வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும் அமிதாப் பச்சன் நீதிபதியாகவும் நடித்துள்ளார். இருவருக்கும் இடையேயான மோதல் தான் படமாக இருக்கும் என்பது போல டிரெய்லர் கட் இடம்பெற்றிருந்த நிலையில், என்கவுன்ட்டரை தாண்டி கல்வி மோசடியை படத்தில் ஆழமாகவும் அழுத்தமாகவும் இயக்குநர் ஞானவேல் வைத்துள்ளார் என்கிற தகவல்கள் லீக் ஆகியுள்ளன.

டீச்சர் துஷாரா விஜயன்: அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா டகுபதி, பகத் ஃபாசில் என பலமான ஆண் நடிகர்கள் மட்டுமின்றி வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி போன்ற பலம் வாய்ந்த பெண் நடிகர்களும் உள்ள நிலையில், அவர்களை வைத்து வேறொரு கேம் பிளேவையே ஞானவேல் நடத்தியிருப்பதாக கூறுகின்றனர். அதிலும், டீச்சராக நடித்துள்ள துஷாரா விஜயனை சுற்றித்தான் கதை நகரும் என்கின்றனர்.

கல்வி மாஃபியா: ஆன்லைன் கல்வி மாஃபியாவுக்கும் அரசு பள்ளிக்கும் இடையே நடக்கும் பிரச்சனையைத் தான் படத்தின் மையக் கதையாக கொண்டு இயக்குநர் ஞானவேல் உருவாக்கியுள்ளார் என்றும் ஆசிரியரை ராணா டகுபதி கொலை செய்து விட அவரை என்கவுண்ட்டர் செய்ய துடிக்கும் போலீஸ் அதிகாரியாகத்தான் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பதாக கூறுகின்றனர்.

பட்டைய கிளப்பும்: ஜெயிலர் படத்தை போல வேட்டையன் படம் ரிலீஸுக்குப் பிறகு தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்றும் படத்தில் அந்தளவுக்கு கன்டெண்ட் இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஞானவேல் சம்பவம்: ஜெய்பீம் எனும் தரமான சம்பவத்தை செய்த ஞானவேல் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என மல்டி ஸ்டார்கள் கிடைத்துள்ள நிலையில், சாதாரண படத்தைக் கொடுக்க மாட்டார் என்றும் மிகப்பெரிய சம்பவத்தை ரசிகர்கள் அக்டோபர் 10ம் தேதி பார்க்கப் போவது உறுதி என்றும் கூறுகின்றனர்.

தீவிர புரமோஷன்: துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வேட்டையன் படத்திற்கான புரமோஷன் பணிகளை லைகா நிறுவனம் ஆரம்பித்து அசத்தலாக நடத்தி வருகிறது. மனசிலாயோ பாடல் அதிகளவில் ரீல்ஸ் வீடியோக்களாக வந்து படத்தை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சென்றுள்ள நிலையில், வேட்டையன் வசூல் வேட்டை ஆடுவான் என்றே தெரிகிறது. படத்தின் கதை மற்றும் திரைக்கதை க்ளிக் ஆனால், இந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X