ஆசையால் சரிந்த சரவணபவன் ராஜகோபால்.. படமாகும் ஜீவஜோதி கதை.. வேட்டையன் இயக்குநரின் அடுத்த படமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்துக்குப் பிறகு இயக்குநர் ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. செட்டில்மென்ட், கட்டப்பஞ்சாயத்து, சேஸிங் எனப் பரபரப்பு மிகுந்த ஜீவஜோதியின் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

1970களில் இறுதியில் சென்னை கேகே நகர் பகுதியில் சாதாரண மளிகை கடை முதலாளியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் தான் ராஜகோபால். பின்னர், 1982ம் ஆண்டு அதே பகுதியில் சரவணபவன் என்ற பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கினார். சுவையிலும் தரத்திலும் மக்களை கவர்ந்து முடிசூடா மன்னன் ஆனார் ராஜகோபால், முதலில் தமிழகம் அடுத்து உலகம் முழுவதும் பல கிளைகளை விரைவுப்படுத்தினார்.

vettaiyan

சரவணபவன் ராஜகோபால்: ராஜகோபால் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் மேலும் மூன்றாவதாக ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அதற்கு காரணம் ஜாதகம், இளம்வயது பெண்ணை திருமணம் செய்தால், உலகம் முழுவதும் பிஸ்னஸ் பெரும் என்று யாரோ ஒருவர் ஆசைவார்த்தை கூற, சரவணபவனின் மேலாளர் மகளான ஜீவாஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால், ஜீவாஜோதி, சாந்தகுமார் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்

காதல் திருமணம்: திருமணத்திற்கு பிறகும், ராஜகோபால், ஜீவஜோதிக்கு பல தொல்லைகளை கொடுத்து வந்ததால், கணவன் மனைவி இருவரும் வேளச்சேரி காவல்நிலையத்தில் ராஜகோபால் மீது புகார் மீது கொடுத்தனர். இந்த நேரத்தில் தான் ஜீவஜோதியின் கணவர் காணாமல் போக, சாந்த குமாரின் உடல் இரண்டு நாட்களுக்கு பின் கொடைக்கானலில் சடலமாக மீட்கப்பட்டது. ஜீவஜோதியைத் திருமணம் செய்யும் ஆசையில்,ராஜகோபால், அதற்குத் தடையாக இருந்த சாந்தகுமாரை தனக்கு நெருக்கமான சிலரை ஏவி கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை: இதையடுத்து, ஜீவாஜோதி,தனது கணவரை ராஜகோபால் தான் கொலை செய்தார் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சிறை தண்டனையை குறைக்கக் கோரி ராஜகோபால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், ஜீவஜோதியோ தண்டனை அதிகரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு தண்டனையை அதிகரித்து ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஆனால் உச்சநீதிமன்ற ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

உயிரிழந்தார்: இளம் வயதில் கடும் உழைப்பாளியாக இருந்து வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து அனைவரும் பிரமிக்கும் வகையில் உயர்ந்து இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்த ராஜகோபால், முதுமையில் வயதுக்கு மீறிய காம ஆசையால், கொலை வழக்கில் சிக்க, சிறைக்கு செல்லும் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.

vettaiyan

தோசா கிங்: கொலை மிரட்டல், செட்டில்மென்ட், கட்டப்பஞ்சாயத்து, சேஸிங் எனப் பரபரப்பு மிகுந்த ஜீவஜோதியின் வாழ்க்கை, சினிமாவாக உருவாகிறது. மும்பையைச் சேர்ந்த பெரிய தயாரிப்பு நிறுவனமான ஜங்லீ பிக்சர்ஸ்' ஜீவஜோதியின் வாழ்க்கையைப் படமான தோசா கிங் என்ற பெயரில் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜீவஜோதி இரண்டு ஆண்டுக்கு முன்பே கையெழுத்துவிட்டடார்.இப்படம் ஏழு மொழிகளில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில்உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

18 ஆண்டு போராட்டம்: ஜீவஜோதி தனது கல்லூரி நண்பரான தண்டபாணியை திருமணம் செய்து கொண்டார். தற்போது தஞ்சாவூரில் வசித்து வரும் இவர், தன் வாழ்க்கைப்படம் திரைப்படமாக வருவதில் மிக்க மகிழ்ச்சி. கணவர் கொலைக்கு நீதி கேட்டு 18 வருடங்கள் போராட்டம் நடத்தினேன். எந்த இடத்திலும் பின் வாங்காமல் உறுதியாக இருந்து தண்டனை பெற்று தந்தேன். இந்த வழக்கில் என்ன நடந்தது என்றும், எனக்கும், அதில் தொடர்புடையவர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் மட்டுமே தெரியும். படம் வெளியானால், நான் சந்தித்த வலியும் வேதனையும் அனைவருக்கும் புரியும் பேட்டி ஒன்றில் ஜீவஜோதி பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X