Rajinikanth: சூர்யாவின் கங்குவா மீது ரஜினிகாந்துக்கு அப்படி என்ன கோபம்?.. காரணம்தான் ஹைலைட்டே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் வேட்டையன். ஜெய் படத்தினை இயக்கிய இயக்குநர், ஞானவேல் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமாவின் நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில், துசாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரிலீஸ் ஆவதாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ள தினமான அக்டோபர் 10ஆம் தேதி, சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர்தான் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் கேள்வி எழுந்தது. அதாவது, சூப்பர் ஸ்டார் படத்துடன் நேருக்கு நேர் மோதும் சூர்யாவின் படம் இதில் தப்பிக்குமா எனவும்? ஏற்கனவே கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் கூறுகையில், நாங்கள் எப்போதும் சூப்பர் ஸ்டாருக்கு எதிராக படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இதனாலே சூர்யாவின் கங்குவாவின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

vettaiyan rajinikanth suriya siruthai siva kanguva

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறமோ, சூப்பர் ஸ்டாரிடம் பேசிப்பார்த்தால் அக்டோபர் 10ஐ சூர்யாவின் கங்குவாவிற்கு விட்டுத்தந்துவிடுவார் என நம்பி, கங்குவா படக்குழுவினர் சூப்பர் ஸ்டாரிடம் பேசியதாக கூறப்பட்டது. மேலும் சூப்பர் ஸ்டாரைப் பொறுத்தவரையில், அக்டோபர் 10ஆம் தேதி நீங்களுமே ரிலீஸ் செய்து கொள்ளுங்களேன் எனக் கூறினார் எனவும் பேசப்பட்டது, ஆனால், மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அக்டோபர் 10ஆம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதில் குறியாக இருக்கின்றார் என்பது மட்டும் புலப்பட்டது.

கறார் காட்டிய ரஜினி: பட ரிலீஸ் தேதியில் சூப்பர் ஸ்டார் இவ்வளவு கறாராக இருக்க முக்கிய காரணமே கங்குவா படக்குழுவில் உள்ள மிகவும் முக்கியமான நபர்தான் எனக் கூறப்பட்டது. ஏற்கனவே அவர் மீது இருந்த கோபத்தை சூப்பர் ஸ்டார் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் பலமாக அடிபடுகின்றது. அதாவது கடந்த 2019ஆம் தேதி பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மார்கெட் தரத்திற்கு ஏற்ற வெற்றியாக அமையவில்லை.

பேட்ட - விஸ்வாசம்: இதற்கு காரணம், பேட்ட ரிலீஸ் தேதியில் வெளியான விஸ்வாசம் படம்தான். இந்தப் படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க, சிறுத்தை சிவா படத்தினை இயக்கியிருந்தார். இந்தப் படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது. குறிப்பாக பொங்கல் ரிலீஸ் படங்களில் பேட்ட படத்தை விடவும் குடும்ப ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் விஸ்வாசம். இதுமட்டும் இல்லாமல், பேட்ட படத்தின் காட்சிகள் சில நாட்களிலேயே குறையத் தொடங்கி விஸ்வாசம் படத்தின் படக்காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இப்படியான நிலையில், பேட்ட படத்தின் வசூலும் அடிவாங்கியது.

சொதப்பல் கூட்டணி: அதன் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவாவுடன், இணைந்து குடும்ப ஆடியன்ஸை கவரும் வகையில் ஒரு படம் செய்ய ஆசைப்பட்டு, அண்ணாத்த என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இப்படம் திரையரங்கில் கிட்டத்தட்ட தோல்விப் படமாக அமைந்தது. ஏற்கனவே பேட்ட படத்தின் வசூலை அஜித்தை வைத்து, சிவா சீர்குலைத்தார். அதன் பின்னர் அவருடனே படம் செய்யும்போது தோல்விப் படத்தைக் கொடுத்துவிட்டார். இதனால் சூப்பர் ஸ்டாரின் சம்பளத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை.

பலிஆடான சூர்யா: இப்படி தனது படத்தின் வசூலைக் கெடுத்தது மட்டும் இல்லாமல், தனக்கு வசூலில் தோல்விப் படத்தைக் கொடுத்த சிறுத்தை சிவா மீது சூப்பர் ஸ்டாருக்கு வெளிக்காட்டிக் கொள்ள முடியாத கோபம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாக இருக்கின்றது. இதனால் ஏற்கனவே விஸ்வாசம் படத்தினை தனது படத்திற்கு எதிராக ரிலீஸ் செய்த, சிறுத்தை சிவா, தற்போது வேட்டையன் படத்திற்கு எதிராக கங்குவா படத்தினை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது சூப்பர் ஸ்டார் கோபத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது. இறுதியில் சிறுத்தை சிவா மீது இருக்கும் கோபத்திற்கு சூர்யா பலிஆடாக மாறிவிட்டார் என பலர் உச்சு கொடுக்கின்றனர். ஆனால் இப்படியான பேச்சு இருக்கும் அதேசூழலில், சூப்பர் ஸ்டாருக்கு யார் மீது தனிப்பட்ட கோபமோ, அதனை பலிதீர்க்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை எனவும், அக்டோபர் 10ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்பது படத்தயாரிப்பு நிறுவனமான லைகாவின் முடிவு என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X