பிரபல தமிழ் நடிகர் மகன் கடத்தல்.. பார்க்கிங் பட பாணியில் விபரீதம்.. போலீசில் பரபர புகார்
சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் மாஸ் காட்டி நடித்து வரும் பிர்லா போஸின் மகனை பத்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். காரை பார்க் செய்வதில், ஏற்பட்ட பிரச்சனை,ஆளை கடத்தி தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திருமதி செல்வம், பாரதி கண்ணம்மா உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகரான இருக்கிறார் பிர்லா போஸ். சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானவராக இருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவராக இவர் பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சி.ஐ.டி அதிகாரியாகவும் கெத்தான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வேட்டையன் படத்தில்: தற்போது, இவர் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். த. செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்று வருகிறது.
பார்க்கிங் பிரச்சனை: இந்நிலையில், நடிகர் பிர்லா போஸ், தனது வீட்டில் வண்டியை பார்க்கில் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதில், தனது மகனை பிரச்சினை செய்தவர்கள் கடத்தி சென்று தாக்கியதாகவும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் சென்னையில் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறேன். என் வீட்டுக்கு கீழ் வீட்டில் இருக்கும் பையனை பார்க்க நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் என் காரை சேதப்படுத்தி விட்டார்கள். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்க, அந்தப் பசங்க வயது வித்தியாசம் இல்லாமல் என்னைத் தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். என் மகனும் பதிலுக்கு சத்தம் போட்டான். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாசம் ஆச்சு.
கடத்தி தாக்கினார்கள்: ஆனால், போன வாரம் டியூஷன் போயிட்டு வந்த என் மகனை பத்து பேர் கொண்ட கும்பல் கடத்திக் கூட்டிட்டு போய் அடிச்சு இருக்காங்க. இரத்தம் வெளியே வராதபடிக்கு எல்லாமே உள்காயம். இதை கீழ்வீட்டுப் பையன் தான் செஞ்சுருக்கான். இது தெரிஞ்சதுமே நான் பதறிப்போயிட்டேன். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கேன். அவங்களும் விசாரிட்டு இருக்காங்க. படிக்கற வயசுல மாணவர்கள் மத்தியில் இருக்கற இந்த வன்முறை எனக்கு அதிர்ச்சியா இருக்கு என்று பிர்லா போஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











