Vettaiyan Deleted Scene: வேட்டையன் படத்தில் முத்து பட வசனத்தை பேசி மிரட்டிய ஃபகத் ஃபாசில்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆஃபீஸில் சக்கை போடு போட்டு வருகின்றது. இந்நிலையில் படக்குழு படத்தின் நீளம் கருதி படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் வெளியிடப்பட்டுள்ள காட்சியில் ஃபகத் ஃபாசில் முத்து படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை பேசியுள்ளார். அந்த காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படம் ஆகும். படம் என்கவுன்டர் குறித்தும் நீட் தேர்வு, நீட் தேர்வினால் ஏற்படும் மரணங்கள், நீட் தேர்விற்கு கோச்சிங் கொடுக்கின்றோம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளை ஆகிவற்றை மைய்யமாகக் கொண்டு படத்தின் கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

vettaiyan rajinikanth fahadh faasil

வேட்டையன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்றிருந்த மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்ஸ்டாகிராமிற்குள் நுழைந்தாலே மனசிலாயோ பாடலின் ரீல்ஸ்தான் குவிந்தது. தனது பாடலுக்கு தானே ரீல்ஸ் செய்து அசத்தியிருந்தார் சூப்பர் ஸ்டார். கூலி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வெளியானது. அதேபோல் ஹண்டர் வண்டார் பாடல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

vettaiyan rajinikanth fahadh faasil

டெலிடட் சீன்: இந்நிலையில் படத்தின் டெலிடேட் சீன்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் படத்தில் ஃபகத் ஃபாசில் மற்றும் ரித்திகா சிங் ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கு இடையிலான காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவும் அவர்களுக்கு இடையிலான வீடியோ காட்சிகள்தான். அதில், ஃபகத் ஃபாசில் தனக்கு பசிப்பதாகவும், தனக்கு உணவு ஆர்டர் செய்யும்படியும் ரித்திகா சிங்கிடம் கேட்கின்றார். அதற்கு ரித்திகா சிங், " கேஸில் ஒரு லீட் கூட கிடைக்கவில்லை. எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. உனக்கு மட்டும் எப்படி பசிக்குது எனக் கேள்வி கேட்கின்றார்.

vettaiyan rajinikanth fahadh faasil

முத்து டயலாக்: அதற்கு ஃபகத் ஃபாசில் முத்து படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வசனமான, " பசி, தூக்கம், தும்மல், இருமல், விக்கல், பணம், பட்டம், பதவி இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது. எச்சச்ச எச்சச்ச கச்சச்ச" என அந்த வசனத்தை பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X