ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் வேட்டையன்.. அதுக்குள்ள இவ்வளவு கலெக்‌ஷனா?

சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அதில் ரஜினிகாந்த் குட்டி கதை சொல்லி கலக்கினார். படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட ஆவல் எழுந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் போல் இதுவும் பந்தயம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தச் சூழலில் வேட்டையன் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கிறது வேட்டையன் திரைப்படம். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், விருமாண்டி அபிராமி, துஷாரா விஜயன் என பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக் ரஜினிகாந்த் ஞானவேலுவுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதுதான் இப்போது தமிழ் திரைத்துறையின் ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

rajinikanth vettaiyan


படத்தின் டீசர்: படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில மாதங்களில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதனைப் பார்த்தபோதே இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகத்தான் உருவாகுமோ என்று சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பினார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வேட்டையன் டீசரும் வெளியிடப்பட்டது. அதனைப் பார்க்கையில் இந்தப் படம் முழுக்க முழுக்க ஞானவேலுவின் ஸ்டைலில் இல்லாமல் ரஜினிக்காக கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருப்பது உறுதியானது.

அனிருத் இசை: படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஆனால் பாடல்கள் எல்லாம் வழக்கம்போல் அவரது ஸ்டைலிலேயே இருக்கின்றன. முக்கியமாக ஜெயிலரில் வந்த சூப்பர் ஸ்டார் புராணம் இந்தப் படத்திலும் வருவதால் ரசிகர்களில் பலருக்கு சலிப்பு தட்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி ரஜினியின் புகழை அனிருத் வைப்பதை விட்டுவிட்டு கதைக்கு தேவையான இசையை எப்போதுதான் வைப்பாரோ என்று ஒருதரப்பு ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து மீண்டும் கொண்டுவந்ததை பாராட்டவும் தவறவில்லை.

கலவையான விமர்சனம்தான்: ஞானவேலுவின் இயக்கம் என்பதால் இது கண்டிப்பாக ஜெய் பீம் போன்ற தாக்கத்தை உருவாக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. டீசருக்கு எப்படி கலவையான விமர்சனம் கிடைத்ததோ அதேபோன்ற விமர்சனம்தான் படத்தின் ட்ரெய்லருக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் இது மாஸ் ப்ளஸ் க்ளாஸாகத்தான் இருக்கும் என்று திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

ப்ரீ புக்கிங்: படம் ரிலீஸாக இன்னும் ஐந்து நாட்கள்தான் இருக்கின்றன. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வெளிநாடுகளில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 1.2 மில்லியன் டாலர் வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தொடங்கவிருக்கும் ப்ரீ புக்கிங் இன்னும் வசூலை குவிக்க வாய்ப்புள்ளதால் என்பதால்; வேட்டையன் படம் வசூலில் சக்கைப்போடு போடப்போவது உறுதி என்று ரஜினியின் ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X