வேட்டையன், விடாமுயற்சி.. லைகாவை இதில் எந்த படம் காப்பாற்ற போகிறது?.. லேட்டானாலே கஷ்டம் தான்!

சென்னை: லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை நம்பி தொடர்ந்து பல பெரிய படங்களை தயாரித்து வருகிறது. ஆனால் சமீப காலமாக அந்த நிறுவனத்துக்கு தொடர்ந்து வெற்றி கிடைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் லைகாவுக்கு நல்ல வசூலை ஈட்டி தந்தது. ஆனால், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படமும் நஷ்டத்தையே கொடுத்தது.

Vettaiyan or Vidamuyarchi which movie turns saviour to Lyca Production

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியன் 2 திரைப்படமும் லைகாவுக்கு கை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கூட நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக டிக்கெட் புக்கிங் படுத்துவிட்டது.

மணிரத்னம், ஷங்கர்: இந்திய சினிமாவிலேயே ஜாம்பவான் இயக்குநர்களாக பார்க்கப்பட்ட மணிரத்னம் மற்றும் ஷங்கர் அடுத்தடுத்து லைகாவுக்கு படங்களை பண்ணி இதற்கு மேல் தயாரிப்பு நிறுவனத்தையே நடத்த முடியாத அளவுக்கு லைகாவுக்கு அச்சத்தை கொடுக்கும் விதமாக தொடர் தோல்விகளை தந்து அதிர வைத்து விட்டனர். அதிலும், குறிப்பாக இயக்குநர் ஷங்கர் 2.0 படத்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தையும் லைக்கா நிறுவனத்தில் செய்து சோலியை முடித்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

ரஜினிகாந்த், கமல்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படங்களை தொடர்ந்து தயாரித்த லைகா நிறுவனத்திற்கு பெரிதாக லாபம் கிடைக்காமல் நஷ்டமே ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்தும் அந்தப் படத்தை காப்பாற்ற முடியவில்லை. ரஜினியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படமும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

வேட்டையன் வெல்லுமா?: சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாபச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு சூர்யாவின் கங்குவா படத்துடன் போட்டியாக அக்டோபர் மாதம் வெளியாகிறது. வேட்டையன் திரைப்படம் லைகாவுக்கு லாபத்தை கொடுத்து காப்பாற்றுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

லேட்டாகும் விடாமுயற்சி: இந்தியன் 2 படத்தைப் போலவே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பையும் லைக்கா நிறுவனம் சிறிது காலம் நிறுத்தி வைத்துவிட்டு மீண்டும் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து விடாமுயற்சி தாமதமாகி வரும் நிலையில், அஜித்குமார் எதிர்பார்த்த அளவுக்கு படம் வெயிட்டாக வருமா? லைகாவுக்கு லாபத்தைத் தருமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் இருவரது படங்களும் ஹிட் அடித்தால் லைகா மீண்டு விடும் என்றும் அந்த படங்கள் சொதப்பினால் ரொம்ப கஷ்டம் தான் என்கின்றனர்.

முறையான திட்டமிடல் இல்லை: லைகா நிறுவனம் தயாரிக்கும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வர காரணமே அதன் தலைமை நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் நபர்களிடம் முறையான திட்டமிடல் இல்லை என்பதே காரணம் என்கின்றனர். பெரிய நடிகர்கள் கால் ஷீட் கிடைத்து விட்டால் மட்டும் போதாது, படத்தின் கதையை கவனித்து தேர்வு செய்து பணத்தை போட வேண்டும் என்று சினிமா வட்டாரத்தில் பலர் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X