Vettaiyan: வெயிட்டு காட்டும் வேட்டையன்.. அமெரிக்காவில் அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்.. இவ்வளவா?

சென்னை: த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன் மற்றும் ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

ரஜினிகாந்த் படம் என்றால் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஓவர்சீஸிலும் ரசிகர்களின் கொண்டாட்டம் வேறலெவலில் களைகட்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இப்பவே வேட்டையன் படத்தின் ப்ரீமியர் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவுகள் அங்கே தொடங்கப்பட்டு களைகட்டி வருகின்றன.

vettaiyan rajinikanth box office

இதுவரை சுமார் 80 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்டோபர் மாதமே இன்னமும் தொடங்கவில்லையே அதற்குள் இப்படியொரு அலப்பறையா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

100 கோடி ஓபனிங்: இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்தவொரு படமும் முதல் நாளே 100 கோடி ஓபனிங் வசூல் செய்யவில்லை என்கிற நிலை உள்ள நிலையில், வேட்டையன் திரைப்படம் நிச்சயம் அதை முறியடிக்கும் என்கின்றனர். உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வேட்டையன் படத்தை கிராண்ட் ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. ஆயுத பூஜை விடுமுறையை டார்கெட் செய்து படம் வெளியாக உள்ள நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை வேட்டையன் நடத்தும் என்கின்றனர்.

அமிதாப் பச்சன் குரல்: நடிகர் பிரகாஷ் ராஜ் அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்துள்ள நிலையில், அது செட்டாகவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், அமிதாப் பச்சன் குரலை ஏஐ மூலமாக ஒவ்வொரு மொழிக்கும் ஏற்ற விதமாக மாற்றும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தமிழிலும் தியேட்டர் வெர்ஷனில் அமிதாப் பச்சன் குரலாகவே ஒலிக்கும் என்றும் கூறப்படுகிறது.

வேட்டையன் டிரெய்லர்: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். சன் டிவியிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை வேட்டையன் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். வேட்டையன் டிரெய்லரிலேயே அமிதாப் பச்சனின் குரல் மாறியிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

80 லட்சம் வசூல்: இதுவரை அமெரிக்காவில் 97 ஆயிரம் டாலர்களுக்கு (80 லட்சம்) டிக்கெட் விற்பனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஜெயிலர் படம் 7 லட்சம் டாலர்கள் வரை ப்ரீமியர் ஷோவுக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 600 கோடி ரூபாய் வரை ஜெயிலர் படம் உலகளவில் வசூல் வேட்டை நடத்திய நிலையில், வேட்டையன் படமும் மிகப்பெரிய கலெக்‌ஷனை அள்ளும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.

கோட் வசூலை வீழ்த்துமா?: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பெரிய படங்களில் இந்தியன் 2 பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் விஜய்யின் கோட் திரைப்படம் 450 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது. ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் எளிதில் கோட் படத்தின் வசூலை முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கூறுகின்றனர். த.செ. ஞானவேல் இயக்கம் தரமாக இருந்தால் நிச்சயம் கோட் படத்தின் வசூல் சாதனையை வேட்டையன் முறியடிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X