Vettaiyan Prevue: SPங்கிற பேரில் ஒரு எமன்.. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்.. வேட்டையன் பராக்!
சென்னை: சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
வேட்டையன் படத்தின் ப்ரிவ்யூ எனப்படும் டீசரை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டு தலைவர் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. வேட்டையன் படத்தில் கொடூரமான என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

காவல் துறையின் உயர் அதிகாரியாக அமிதாப் பச்சன் நடித்துள்ள நிலையில், அவருக்கு பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்துள்ளார்.
வேட்டையன் டீசர் எப்படி இருக்கு?: எமன் மாதிரி எஸ்பி இருக்காரே என ரஜினிகாந்துக்கு செம பில்டப் கொடுக்கப்படுகிறது. அமிதாப் பச்சன் காவல் துறை அதிகாரிகளை வைத்துக் கொண்டு சிலரது போட்டோக்களை காண்பிக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான இவர்கள் சில பெரிய என்கவுன்ட்டர்களை செய்த நிலையில், இவர்களை ஹீரோக்களாக கொண்டாடுகின்றனர் என போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரித்திகா சிங் கூறுகிறார்.

இந்த படத்தில் மெயின் வில்லனாக ராணா டகுபதி தான் நடித்திருக்கிறார் என தெரிகிறது. பகத் ஃபாசில், துஷாரா விஜயன், அபிராமி மற்றும் மஞ்சு வாரியர் உள்ளிட்ட கதாபாத்திரங்களை அப்படியே டீசரில் காட்டியுள்ளார் இயக்குநர் த.செ. ஞானவேல்.
என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் வசனம்: என்கவுன்ட்டருக்கு எதிராக ஏகப்பட்ட வசனங்கள் சினிமாவில் உள்ளன. சமூகத்திலும் பலரும் அதற்கு எதிரான குரல்கள் அதிகளவில் ஒலித்து வருகின்றன. ஆனால், ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் என்கவுன்ட்டர் என்பது தப்பு செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை அல்ல என்றும் இனிமேல் யாரும் அது போன்ற தவறு செய்யக் கூடாது என்பதற்காக செய்யும் விஷயம் என டீசரின் இறுதியில் என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். அமிதாப் பச்சன் என்கவுன்ட்டருக்கு எதிராகவும் ரஜினிகாந்த் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் உள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல்களும் படத்தில் இடம்பெறும் என்பது டீசரில் தெரிகிறது.

அனிருத் காப்பாத்துறாரு: ஜெயிலர் படத்தை தொடர்ந்து தனது பேக்கிரவுண்ட் மியூசிக் மற்றும் பாடல்களால் அனிருத் பெரிதும் படத்தைக் காப்பாற்றிவிடுவார் என்றே தெரிகிறது. காவாலா போல மனசிலாயோ பாடல் முதலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து ஹண்டர் வன்ட்டார் ஹுகும் பாடல் போல இன்று வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமிதாப் பச்சன் டப்பிங் சொதப்பல்: அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் டப்பிங் கொடுத்துள்ள நிலையில், வாய்ஸ் சிங்க் டீசரிலேயே ஒட்டவில்லை. கல்கி படத்தில் அமிதாப் பச்சன் குரல் கச்சிதமாக பொருந்தியிருந்தது. ஆனால், ஜெய்பீம் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வேலையாவது கொடுக்கலாம் என ஞானவேல் நினைத்தது எந்தளவுக்கு வேட்டையன் படத்துக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.
ரியல் கதை?: ஞானவேல் படத்தை இயக்குகிறார் என்றால் ஜெய்பீம் போல ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அந்த படத்தின் டீசர் கொடுத்த பாதிப்பு அளவுக்கு வேட்டையன் டீசர் கொடுக்கவில்லை என்று தான் தெரிகிறது. உண்மையான என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கதையை எடுத்து இயக்குநர் இயக்கியிருந்தால் பெரிய சம்பவம் கன்ஃபார்ம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











