Vettaiyan Public Review: தலைவர் பக்கா மாஸ்.. ஜெயிலரை தாண்டிடும்.. வேட்டையன் பப்ளிக் விமர்சனம்!

சென்னை: வேட்டையன் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கே பெங்களூர், அமெரிக்கா, மும்பை உள்ளிட்ட இடங்களில் திரையிடப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் காலையிலேயே கொண்டாட்டத்துடன் வேட்டையன் படத்தை பார்த்துள்ளனர். படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கு? என யூடியூப் சேனல்கள் மற்றும் மீடியாக்கள் கேட்க வேட்டையன் படம் குறித்த விமர்சனங்களை பொதுமக்கள் கூறியுள்ளனர்.

கூட்டத்தில் ஒருவன், ஜெய்பீம் படங்களை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரோகிணி மற்றும் ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

vettaiyan vettaiyan review rajinikanth

அனிருத் இசையமைத்த மனசிலாயோ மற்றும் ஹண்டர் வண்டார் பாடல்கள் ஏற்கனவே அதிரி புதிரி ஹிட் அடித்த நிலையில், படமாக வேட்டையன் எப்படி இருக்கு என ரஜினிகாந்த் ரசிகர்களும் பொது மக்களும் தெரிவித்துள்ள விமர்சன கருத்துக்களை இங்கே காணலாம்.

ஜெயிலரை விட மாஸ்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அந்த படத்தை விட செம மாஸாக வேட்டையன் படம் இருப்பதாகவும் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும் ஒரு சீன் கூட போர் அடிக்காமல் செல்வதாகவும் ரசிகர் ஒருவர் படத்தை பார்த்து விட்டு கண்கலங்கியபடி வந்து பேட்டியளித்துள்ளார்.

பகத் ஃபாசில் சூப்பர்: ரஜினிகாந்தை தாண்டி படத்தில் பகத் ஃபாசில் வரும் காட்சிகள் எல்லாம் அடிபொலியாக உள்ளது. எப்பவுமே தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்யும் அவர், இந்த படத்திலும் வெயிட்டு காட்டியுள்ளார் என இன்னொரு ரசிகர் கூறியுள்ளார்.

கண் சிமிட்டக் கூட நேரமிருக்காது: வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாதியில் கண் சிமிட்டக் கூட நேரமில்லாத அளவுக்கும் சீட்டை விட்டு நகர முடியாத அளவுக்கும் திரைக்கதை மற்றும் கதையை இயக்குநர் ஞானவேல் செம க்ரிப்பாக வடிவமைத்து இருப்பது தான் படம் பிளாக்பஸ்டர் படமாக அமைய காரணமே என இன்னொரு ரசிகர் கூறியுள்ளார்.

ஞானவேலுக்கு நன்றி: ரஜினிகாந்தின் பிரசன்ஸ் ஆஃப் மைண்டை பயன்படுத்தி இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக வேட்டையன் படத்தை கொடுத்த ஞானவேலுவுக்கு நன்றி. மாஸ், ஸ்டைல் எல்லாம் சரியாக கலந்துக்கட்டி ரசிகர்களுக்கு தரமான ஆயுத பூஜை ட்ரீட்டை கொடுத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் ஜெயிலர் படத்தை விட அதிக வசூலை வேட்டையாடும். தலைவர் தான் ரெக்கார்டு மேக்கரே என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என தலைவர் ரசிகர்கள் முதல் காட்சியை பார்த்து விட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

சோஷியல் மெசேஜ் பக்கா: வேட்டையன் படத்தில் சோஷியல் மெசேஜை பக்காவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். அடுத்து என்ன ஆகும் என்கிற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. மலையாளத்தில் வெளியான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களை போல தமிழில் ஒரு தரமான படத்தை கொடுத்து தலைநிமிர செய்திருக்கிறார் ஞானவேல். சமூக அக்கறை, ரஜினிகாந்த் ஸ்டைல் அண்ட் மாஸ் என அனைத்தையும் அழகாக செதுக்கி அசத்தியுள்ளனர். வேட்டையன் திரைப்படம் நிச்சயம் வெற்றிப் படம் தான் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டு ரசிகர்களின் விமர்சனங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X