Vettaiyan: வேட்டையனில் ரஜினி தெறிக்கவிடப் போகும் சீன்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!
தூத்துக்குடி: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பு நான் ஸ்டாப் மோடில் வேகமாக நடைபெறுகிறது. தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கியமாக மல்லுவுட் ஹீரோ ஃபஹத் பாசில் ரஜினியுடன் நடிக்கவிருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேட்டையனில் ரஜினி தெறிக்கவிடப் போகும் சீன் இதுதான் என ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.
ரஜினியுடன் இணைந்த பிரபலம்: ஜெயிலர் படத்தின் வெற்றியால் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. இதில், ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் ஜனவரி 26ம் தேதி ரிலீஸாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம் தலைவர் 170 படத்தில் பிஸியாக இருக்கிறார் ரஜினி. லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என படக்குழு அபிஸியலாக அறிவித்துவிட்டது. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வேட்டையன் டைட்டில் டீசரில், 'குறி வச்சா இரை விழணும்' என பஞ்ச் டயலாக் பேசி மாஸ் காட்டியிருந்தார் சூப்பர் ஸ்டார்.
இதனால் ஜெயிலர் போல வேட்டையனும் சம்பவம் செய்வான் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மல்லுவுட் மாஸ் ஹீரோ ஃபஹத் பாசில், டோலிவுட் ஹீரோ ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதனால் வேட்டையன் திரைப்படம் தரமான சம்பவமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
முக்கியமாக ரஜினியுடன் ஃபஹத் பாசில் நடிப்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஹைப் கொடுத்துள்ளது. சும்மாவே தனது நடிப்பில் வெரைட்டி காட்டும் ஃபஹத் பாசில், வேட்டையனில் ரஜினிக்கே டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினியின் மகனாக ஃபஹத் நடிப்பதாகவும், அவருக்கு வில்லன் கேரக்டர் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வேட்டையன் படப்பிடிப்பு நேற்று தூத்துக்குடி பகுதியில் தொடங்கியது.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஃபஹத் பாசிலும் நடித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. இந்த ஷெட்யூல் முழுவதுமே ரஜினி, ஃபஹத் பாசில் இருவருக்குமான காட்சிகளை படமாக்கவுள்ளாராம் தசெ ஞானவேல். இந்நிலையில், வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி, ஃபஹத் பாசில் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இந்த சீன் பள்ளிக்கூடத்தில் வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











