சென்னையில் விஜய்.. பாண்டிச்சேரியில் ரஜினிகாந்த்.. ரெண்டு பேரும் ரசிகர்களுக்கு கொடுத்த பொங்கல் ட்ரீட்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று புதிய படங்கள் வெளியானாலும் ரஜினி, விஜய், அஜித் படங்கள் வெளியாகவில்லையே என ரசிகர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களை தங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் சந்திக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. ரசிகர்களுக்கான நடிகர்கள் என இருவரும் மாறி அதிரடி காட்டி வரும் நிலையில், இதிலும் போட்டா போட்டி நல்லா இருக்கே பாஸ் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் 73 வயதிலும் எனர்ஜி குறையாமல் என்னம்மா வேகமா நடந்துப் போறாரு பாருங்க என தலைவர் ரசிகர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் மற்றும் ஸ்பீடை பார்த்து கூஸ்பம்ப்ஸ் அடைந்துள்ளனர்.

Vettaiyan Rajinikanth latest video at Pondicherry goes trending in social media

சென்னையில் விஜய்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் அந்த படத்தின் ஷூட்டிங் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு போட்டோ கூட வெளியாகவில்லை. அதே போலத்தான் லியோ படத்தின் பல நாள் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற போதும் விஜய் இந்த அளவுக்கு ரசிகர்களை சந்தித்ததே இல்லை. ஆனால், தற்போது பொங்கல் பண்டிகை பரிசாக ரசிகர்களை தொடர்ந்து இரு தினங்களாக நடிகர் விஜய் க்ளீன் ஷேவ் லுக்கில் மீசை இல்லாமல் மகன் விஜய் கெட்டப்பில் சந்தித்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார்.

Vettaiyan Rajinikanth latest video at Pondicherry goes trending in social media

தலைவர் ஸ்டைலே தனி: இந்நிலையில், பாண்டிச்சேரியில் வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் நம்ம ஊருக்கு படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் என்கிற தகவல் தெரிந்ததும் ரசிகர்கள் ஓடோடி வந்து அவரை பார்க்க வந்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் வருவதை அறிந்து கொண்டு செம வேகமாக நடந்து கேரவனுக்குள் சென்ற ரஜினிகாந்த். கேரவனுக்குள் செல்வதற்கு முன்னதாக வேட்டையன் லுக்கில் ரசிகர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

பொங்கல் விருந்து: இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வரவில்லை என்றாலும் அவர்களது ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்களும் புது கெட்டப்புகளும் ரசிகர்களுக்கு வீடியோவாக வெளியாகி உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரஜினிகாந்தின் லால் சலாம் அடுத்த மாதம் வெளியாகி இன்னமும் தலைவர் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X