Vettaiyan: திடீரென தூத்துக்குடிக்கு பறந்த சூப்பர் ஸ்டார்... மீண்டும் தொடங்கிய வேட்டையன் சம்பவம்!

தூத்துக்குடி: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது 170வது படமான வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார்.

மீண்டும் தொடங்கிய வேட்டையன் சம்பவம்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்து ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருந்தது. ஆனால், தற்போது பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கிய லால் சலாம், ஜனவரி 26ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

 Vettaiyan: திடீரென தூத்துக்குடிக்கு பறந்த சூப்பர் ஸ்டார்... மீண்டும் தொடங்கிய வேட்டையன் சம்பவம்!

இதனிடையே தனது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் சூப்பர் ஸ்டார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் வேட்டையன் என ரஜினியின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டது. வேட்டையன் டைட்டில் டீசரில், சால்ட் & பெப்பர் லுக்கில் மிரட்டியிருந்தார் ரஜினி. இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அதேபோல் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ரானா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நெல்லை, மும்பை, சென்னை என பல இடங்களில் நடைபெற்றது. வேட்டையன் படப்பிடிப்புக்கு கடந்த சில தினங்களாக பிரேக் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார் சூப்பர் ஸ்டார். அதன்படி, வேட்டையன் அடுத்தக்கட்ட ஷூட்டிங் தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி சென்றிருந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்திருந்தனர். சில நாட்கள் மட்டும் நடைபெறும் தூத்துக்குடி ஷெட்யூலில் ரஜினியின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இதோடு ரஜினியின் போர்ஷன் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

அதன்படி, வேட்டையன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ஜனவரி மாதம் முடிந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனையடுத்து விரைவில் வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட லைகா புரொடக்‌ஷன்ஸ் பிளான் செய்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X