Vettaiyan: வேட்டையன் நல்ல படம்.. விஜய் ரசிகர்கள் விமர்சனங்களை நம்பாதீங்க.. அந்தணன் ஓபன் டாக்!

சென்னை: சமீப காலமாக வெளியான ரஜினிகாந்த் படங்களிலேயே நல்ல கருத்துள்ள படமாக வேட்டையன் படம் உள்ளது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறையாது என்பது போல என்னதான் விஜய் ரசிகர்கள் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்தாலும் இந்த படம் ஒரு நல்ல படம் என அந்தணன் பேசியுள்ள வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இயக்குநர் த.செ. ஞானவேல் ரஜினிகாந்த் எனும் உச்ச நட்சத்திரத்தை வைத்து பல்வேறு சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை அடுக்கி வேட்டையன் படத்தை செதுக்கியிருக்கிறார்.

vettaiyan anthanan rajinikanth

இரண்டாம் பாதியில் சில தொய்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதற்காக இந்த படம் நல்ல படமே இல்லை என்றும் தோல்விப் படம் என்று சொல்வதெல்லாம் அபத்தமான ஒன்று என அந்தணன் தனியாக ஒரு வீடியோ போட்டு வேட்டையன் படத்தை பாராட்டியிருக்கிறார்.

பாசிட்டிவ் விமர்சனம்: வேட்டையன் படத்துக்கு வலைப்பேச்சு டீம் கொடுத்த விமர்சனத்திலும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். ஆனால், ராணா டகுபதியின் அந்த கார்ப்பரேட் வில்லன் போர்ஷனை மட்டும் கொஞ்சம் சரியாக கையாண்டு இருக்கலாம் என்கிற விமர்சனத்தை முன் வைத்தனர். வேட்டையன் படத்தின் முதல் பாதி முழுவதும் பரபரப்பாக ஒரு டிடெக்டிவ் த்ரில்லர் படமாகவே உருவாக்கப்பட்டு இருந்தது. அதிலும், அந்த குணா போர்ஷன் ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்திருந்தது என விமர்சனம் கொடுத்தனர்.

விஜய் ரசிகர்களின் வேலை: விஜய்யின் கோட் படம் வெளியானதும் மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் அந்த படத்தை தோல்விப் படமாக மாற்ற வேண்டும் என படு மோசமாக விமர்சனங்களை கொடுக்க ஆரம்பித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் வேட்டையன் டிசாஸ்டர் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்தும் சோஷியல் மீடியா விமர்சகர்கள் என்கிற பெயரிலும் வேட்டையன் படம் சொதப்பல் படம் என கடுமையாக விமர்சித்தனர்.

வேட்டையன் நல்ல படம்: ஆனால், அதெல்லாம் நம்பாதீங்க என்றும் விஜய் ரசிகர்கள் என்னதான் நைட்டும் பகலுமா பொய் பிரச்சாரம் செய்தாலும் இந்த வேட்டையன் படம் நல்ல படம் தான். என்கவுன்ட்டருக்கு எதிரான கருத்துக்களையும், கல்வியில் நடக்கும் மாஃபியாவையும் அழகாக எடுத்து சொல்லி ஒரு தரமான படத்தை ஞானவேல் கொடுத்துள்ளார் என அந்தணன் படத்தை பாராட்டியுள்ளார்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: ஆயுத பூஜை, விஜயதசமிக்கு ரஜினிகாந்த் படத்தை பார்க்கும் குடும்ப ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாற்றத்தான் போகின்றனர். வேட்டையன் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கத்தான் போகிறது. அதை யாருமே தடுக்க முடியாது என்று அந்தணன் தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்போது வேட்டையன் படத்துக்கு தனது முழு ஆதரவை அளித்துள்ளார்.

வேட்டையன் வசூல்: ரஜினிகாந்தின் வேட்டையன் வசூல் முதல் நாளில் 70 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், நிச்சயம் இந்த விடுமுறை நாட்களில் தொடர்ந்து படம் மிகப்பெரிய கலெக்‌ஷனை அள்ளும் என்றும் அந்தணன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் ரசிகர்கள் வேட்டையன் படத்தை வெறித்தனமாக கொண்டாட ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூலை வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். அதாவது இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X