கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!

சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். ஏப்ரல் மாதமே அந்த படம் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையாமல் இருப்பது ரஜினிகாந்தை லேசாக அப்செட் ஆக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலா, தர்பார், அண்ணாத்த என நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் தொடர்ந்து சொதப்ப ஆரம்பித்தன. சூப்பர் ஸ்டார் மார்க்கெட் அவ்வளவு தான் என சினிமா வட்டாரமே நினைத்துக் கொண்டிருந்த நிலையில், நான் யானை இல்லை குதிரை டக்குன்னு எழுந்துடுவேன் என கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.

Vettaiyan shoot will wrap on this date and Coolie shoot will starts next month

இந்த ஆண்டு மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த நிலையில், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், அடுத்தடுத்து வேட்டையன் மற்றும் கூலி படங்கள் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்டி ஸ்டார் படங்கள்: ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என ஏகப்பட்ட மல்டி ஸ்டார் நடிகர்கள் இணைந்து நடித்தனர். அந்த படம் ரஜினிகாந்துக்கு மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 600 கோடி வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி என மீண்டும் மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்ததாக உருவாக உள்ள கூலி படத்திலும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல முன்னணி நடிகர்களை லோகேஷ் கனகராஜ் இறக்கப் போவதாக கூறுகின்றனர்.

வேட்டையனை முடிச்சிடலாமா?: வரும் மே 12ம் தேதியுடன் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட ரஜினிகாந்த் உத்தரவு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே மாதத்திற்கு முன்னதாகவே வேட்டையன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

கூலி ஷூட்டிங் எப்போ?: கூலி படத்தின் இன்ட்ரோ வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடத்தப்பட்ட நிலையில், கூலி படத்தின் படப்பிடிப்பு வரும் மே 15ம் தேதி முதல் ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் ரெஸ்ட்டே இல்லாமல் வேட்டையன் முடித்த கையோடு கூலி படத்தில் நடிக்கப் போவதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து விடவும் சொல்லியிருப்பதாக அப்டேட்கள் கிடைத்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X