Vettaiyan: ஜெயிலர் டெலிட்டட் சீனா? தலைவர் 170 ’வேட்டையன்’ டீசரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்!

சென்னை: Vettaiyan - ஜெய்பீம் என சூர்யாவை வைத்து த.செ. ஞானவேல் படம் இயக்கிய நிலையில், ரஜினிகாந்த் படத்துக்கும் வித்தியாசமான சமூக அக்கறை சார்ந்த டைட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சந்திரமுகி படத்தில் ஃபிளாஷ்பேக் ரஜினிகாந்த் பெயராக வரும் வேட்டையன் என்பதையே டைட்டிலாக வைத்துள்ள நிலையில், அறிமுக டீசரை பார்த்த விஜய் ரசிகர்கள் ஜெயிலர் படம் போலவே இருக்கே என கலாய்த்து வருகின்றனர்.

Vettaiyan title teaser gets trolledy by Vijay fans for this reason

வேட்டையன் பராக்: சந்திரமுகி படத்தில் வேட்டையனாக ரஜினிகாந்த் வந்து வசூல் வேட்டை நடத்தினார். இந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் வேட்டையன், செங்கோட்டையன் என வெறுப்பேற்றி அந்த டைட்டிலையே சொதப்பி விட்டார். இந்நிலையில், மீண்டும் வேட்டையனாக நானே வந்து வசூல் வேட்டை ஆடிக்கிறேன் கொஞ்சம் மத்தவங்களாம் ஒதுங்குங்க என தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் டைட்டிலுடன் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வர காத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

அரை மணி நேரம் தாமதம்: ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டில் மற்றும் மினி டீசர் வெளியாகும் என அறிவித்து இருந்தனர். 5 மணிக்கு வரும் என லைகா அறிவித்த நிலையில், 5.30 மணிக்குத் தான் வேட்டையன் டைட்டில் அறிவிப்புடன் அட்டகாசமான டீசர் வெளியானது. அரை மணி நேரமாக லைகாவை ரஜினி ரசிகர்கள் திட்டித் தீர்த்து விட்டனர்.

ஜெயிலர் வாடை அடிக்குதே: ரஜினிகாந்த் பிறந்தநாள் அதுவுமாக அறிவிப்பு வந்தாலும், நெகட்டிவிட்டியை பரப்ப காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் டெலிட்டட் சீன் போலவே இருக்கு என்றும் புதிதாக ஒன்றுமில்லை என வேட்டையன் அறிமுக டீசரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

கண்ணு தெரியலையா?: மேலும், கருப்பு கண்ணாடியுடன் தடியை வைத்துக் கொண்டு ரஜினிகாந்த் நடந்து வரும் காட்சியை பார்த்த ரசிகர்கள் ரஜினி கண்ணு தெரியாதவரா நடிக்கிறாரா என்றும் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

கழுகு சத்தம்: அனிருத் இந்த படத்திலும் வித்தியாசமான டைட்டில் பிஜிஎம் போட்டது மட்டுமின்றி குறி வச்சா என ரஜினி பஞ்ச் பேசும் போது கழுகு சத்தத்தை போட்டுள்ளார். ரத்னகுமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே குறி வச்சா இரை விழணும் என ரஜினி பஞ்ச் பேசியுள்ளார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X