Vettaiyan: வேட்டையன் பராக்... இது பொங்கல் மாஸ் என்ட்ரி... தெறிக்கும் ரஜினியின் மாஸ் போஸ்டர்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தை தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வேட்டையன் திரைப்படத்தை ஏப்ரல் அல்லது கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் மாஸ் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
வேட்டையனின் வெறித்தனமான என்ட்ரி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக் அமைந்தது. பேட்ட, தர்பார், அண்ணாத்த என தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஜெயிலரில் கம்பேக் கொடுத்தார் தலைவர். இதனையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்திலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் 170 படத்துக்காக இயக்குநர் தசெ ஞானவேலுடன் இணைந்தார் ரஜினி. லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் வேட்டையன் என அறிவிக்கப்பட்டது. இதில், ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள படக்குழு, ரஜினி துப்பாக்கியுடன் ஸ்டைலாக நடந்து வரும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கூலர்ஸ் அணிந்துபடி செம்ம கெத்து காட்டியுள்ளார் தலைவர்.
இதனையடுத்து வேட்டையன் ஸ்பெஷல் போஸ்டரை ரசிகர்கள் டிவிட்டர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது எனவும் கேட்டு வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய லால் சலாம், அடுத்த மாதம் ரிலீஸாகவிருப்பதால், விரைவில் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டும் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். வேட்டையனை தொடர்ந்து இன்று லால் சலாம் செகண்ட் சிங்கிளும் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











