Vettrimaaran Kavin: வெற்றிமாறன் கூட்டணியில் கவின்... ஜோடி நயன்தாராவா..? பரபரக்கும் கோலிவுட்!!

சென்னை: கோலிவுட்டின் இளம் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் பிஸியான ஹீரோவாகி விட்டார். டாடா வெற்றியை தொடர்ந்து கிஸ், ஸ்டார் உட்பட மேலும் ஒரு படத்தில் நடித்து வரும் கவின், வெற்றிமாறனுடன் இணையவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறனுடன் இணையும் கவின்
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அறிமுகமான கவின், தற்போது முன்னணி நடிகராக மாஸ் காட்டி வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் கவினுக்கு அதிகமான ஹீரோ வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும், நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியான லிஃப்ட் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

 Vettrimaaran Kavin: Kavin is playing the hero in the film produced by Vetrimaaran

அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியான டாடா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. மினிமம் பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான டாடா அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ரீச் ஆனது. இதனால் அடுத்தடுத்து கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஸ்டார், கிஸ் உட்பட மேலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கவின். இதில் ஸ்டார் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறனுடன் கவின் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன், தற்போது விடுதலை 2ம் பாகம் இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் விஜய்யின் தளபதி 69 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டிலும் வெற்றிமாறன் தான் முன்னணியில் உள்ளார்.

அதுதவிர வடசென்னை 2 உள்ளிட்ட மேலும் சில கதைகளையும் வெற்றிமாறன் ரெடியாக வைத்துள்ளார். இந்த நிலையில் தான் கவினும் வெற்றிமாறனுடன் இணைவதாக சொல்லப்படுகிறது. அதன்படி வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். கவினின் 7வது படமாக உருவாகும் இதனை அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோகன் இயக்கவுள்ளாராம்.

முக்கியமாக நயன்தாரா இந்தப் படத்தில் லீடிங் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நயன்தாரா அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில் கவினுடன் நயன் இணையவிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன், கவின், நயன்தாரா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட், அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X