மீண்டும் தனுஷை இயக்குகிறாரா வெற்றிமாறன்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தொடர்ந்து ஆடுகளம் படத்தை இயக்கினார். ஆடுகளம் படம் தேசிய விருது பெற்றது.

Vettrimaran again directs Actor Dhanush?

தொடர்ந்து பல படங்களை தயாரித்துள்ள வெற்றிமாறன், தனுஷை வைத்து வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Suriya dual role in vetrimaran Vadivaasal • Aruva, Hari

மேலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதற்கான போஸ்டர் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது.

இதேபோல் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்ளில் நடிக்கிறார். மேலும் ஒரு பாலிவுட் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X