5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் வெற்றிமாறனின் விடுதலை.. எல்லாம் அவருக்காகதானாம்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் விடுதலை திரைப்படம் ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடுதலை. இந்தப் படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கிறார்.
விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் கூட்டாக இணைந்து தயாரிக்கின்றனர்.

விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விடுதலை படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் தமிழில் மட்டுமே இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது.
Recommended Video
ஆனால் விஜய் சேதுபதிக்கு தென்னிந்தியாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ரசிகர்கள் இருப்பதால் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











