என் லட்சியமே அதுதான் கமலுக்காக காத்திருக்கும் வெற்றிமாறன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் லட்சியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில நடிகர் கமல்ஹாசனை வைத்து ஒரு முக்கியமான படத்தை இயக்குவதுதான் எனது லட்சியம் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ள தகவலை கூறியிருக்கிறார்.

தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஆர்யாவை நடிகர் கமல் புகழ்ந்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து நடத்தும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் நெற்றிக்கண் என்ற படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ராக்கி என்ற ரீமேக் படம் படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
4 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறியும் தெலுங்கில் கள்ளக்காதலி கேரக்டரில் நடிகை நயன்தாரா நடிக்க மறுத்த தகவலையும் பிகே டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார்.
தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைய உள்ளதாகவும் அந்தப் படம் புதுப்பேட்டை 2ஆக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











