இயக்குநராக முடியாத விரக்தி... 'ஆணுறுப்பை உடைத்த' ஒரிஜினல் "வேலை இல்லாத பட்டதாரி"- சென்னையில் திடுக்!

By Mathi

சென்னை: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகாலம் துணை இயக்குநராக இருந்தும் திரைப்படம் இயக்க வாய்ப்பு கிடைக்காத ஒருவர் விரக்தியின் உச்சத்தில் தனது 'ஆணுறுப்பை' வேண்டும் என்றே அழுத்தி, அதை சேதப்படுத்தி "உடைத்த" சம்பவம் அதிர வைத்துள்ளது.

தமிழ் சினிமா எத்தனையோ ஆயிரம் பேருக்கு நாள்தோறும் நம்பிக்கை தருகிறது.. அதே நேரத்தில் எத்தனையோ பல்லாயிரம் பேருக்கு துயரத்தையும் நாள்தோறும் நிமிடந்தோறும் தந்தும் கொண்டிருக்கிறது..

குமுறல்களின் சங்கமம்

குமுறல்களின் சங்கமம்

20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் சினிமாவில் இயக்குநராக துடிப்பவர்கள் துவண்டு கொண்டே இருக்க. அனுபவமே இல்லாமல் வந்து அலேக்காக வெற்றியை பெறுகிறவர்கள் மற்றொரு பக்கம் அணி வகுக்க... கோடம்பாக்கம் குமுறல்களின் சங்கமமாகிக் கொண்டுதான் இருக்கிறது..

கதறி அழுகிற இயக்குநர்கள்

கதறி அழுகிற இயக்குநர்கள்

வாய்ப்பு கிடைத்து படம் எடுத்தாலும் அது வெளிவருவதற்குள் பத்து பிரசவ வேதனையை பிரபல இயக்குநர்களே கண்ணீர்விட்டு கதறி அழுது சொல்கிற கதை இன்றும் இப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.. கோடம்பாக்கத்தின் திரும்பிய திசையில் ஒன்றிரண்டு வெளிச்சங்களைத் தவிர பெரும்பகுதி வலி..

விரக்திகளின் உச்சம்

விரக்திகளின் உச்சம்

இந்த வலிகளின் விரக்திகளின் உச்சமாக ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்து போயிருக்கிறது. அந்த சம்பவத்தை பாலியல் தொடர்பான சிகிச்சைகளை அளித்து வரும் மருத்துவர் காமராஜ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மருத்துவர் காமராஜின் பதிவு

மருத்துவர் காமராஜின் பதிவு

மருத்துவர் காமராஜ் போட்டிருக்கும் பதிவு இதுதான்:

ரஜினிகாந்த் , கமல்ஹாசன் போன்ற உச்சம் தொட்ட மனிதர்களை நாம் நன்கு அறிவோம். ஆனால் இவர்கள் பின்னால் உள்ள, வெளியில் தெரியாத பல்லாயிரக்கணக்கான திரைத்துறையினர் வாழ்க்கை மிக பரிதாபகரமானது.

நாற்பது வயதுக்கு மேலாகியும்

நாற்பது வயதுக்கு மேலாகியும்

நாற்பது வயதிற்கு மேல் ஆகியும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒருபடம் இயக்கிவிட்டுத்தான் திருமணம் என வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருப்பார்கள். வாழ்க்கையின் பகுதியாக திருமணம், படம் இயக்குதல் என இல்லாமல் வாழ்க்கையே கானல் நீராய் போனவர்கள் ஏராளம்.

துணை இயக்குநரின் சோகம்!

துணை இயக்குநரின் சோகம்!

இன்று சிகிச்சைக்காக வந்த நண்பர் 20 வருடங்கள் துணை இயக்குனராக முயன்று தோற்றவர் . இன்னும் திருமணமாகாதவர். இரவில் இயல்பான ஆண்மை எழுச்சியை, விரக்தியினால், ஆணுப்பை பலமாக அழுத்தி, ஆணுறுப்பு உடைந்து (fracture of penis) பெரிதாக வீங்கி , சிறுநீர் கழிக்க முடியாமல் வந்திருந்தார்

ஆண்மையே வேண்டாம்..

ஆண்மையே வேண்டாம்..

வேலை இல்லாத எனக்கு ஆண்மை வேண்டியதில்லை , திருமணம் இனி செய்துகொள்ளப்போவதில்லை எனக்கூறினார். (Fracture of penis என்பது மிக மிக அரிதான நிகழ்வு.) உண்மையில் வேலையில்லா பட்டதாரிகள் நிலை மிக்க கொடுமையானதுதான்.

இவ்வாறு மருத்துவர் காமராஜ் தமது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

துயர விரக்திகள்

துயர விரக்திகள்

சுகானுபவாங்கள் சுழன்றடிக்கும் அதே கோடம்பாக்கத்தில் இதோ இந்த துணை இயக்குநர்களின் துயர விரக்திகள் விரக்திகளாகவே வியாபித்தே கிடக்கிறது

ஒரு ஒரிஜனல் வேலை இல்லா பட்டதாரியின் நிஜ வாழ்க்கை எத்துணை பெருந்துயரமானது!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X