யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த வெய்யோன் சில்லி.. காதலர் தினத்துக்கு ஏற்ற ரொமான்டிக் சாங்!
Recommended Video
சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான வெய்யோன் சில்லி பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி உள்ள படம் சூரரைப் போற்று.
சூரரைப் போற்று டீசர் வெளியாகி வைரலான நிலையில், நேற்று வெளியிடப்பட்ட வெய்யோன் சில்லி ஒரு நிமிட வீடியோ இளைஞர்கள் ஃபேவரைட் பாடலாக மாறியுள்ளது.

விமானத்தில் பறந்தபடி
சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிளாக மாறா தீம் பாடல் வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக நடுவானில் விமானத்தில் பறந்த படி வெய்யோன் சில்லி பாடல் வீடியோ திரையிடப்பட்டது.
யூடியூப் டிரெண்டிங்கில்
விமானத்தில் வெய்யோன் சில்லி வீடியோ பாடலை வெளியிட்ட நடிகர் சூர்யா, அதனை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, அந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 1.5 மில்லியன் வியூஸ் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் வெய்யோன் சில்லி முதலிடத்தை பிடித்துள்ளது.
காதலர் தின கொண்டாட்டம்
காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான ரொமாண்டிக் பாடலான வெய்யோன் சில்லி பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இறுதி சுற்று படத்தில் இடம்பெற்ற ஏ சண்டக்கார பாடலை போலவே இந்த பாடலின் காட்சிகளும், காதலர்களுக்கு பிடித்தது போல அமைந்துள்ளது.

ரொமான்டிக் வரிகள்
மெர்சல், சர்கார், பிகில் உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் விவேக், நடிகர் சூர்யாவுக்காக வெய்யோன் சில்லி எனும் புதுமையான வரிகளை கொண்டு காதல் ரசத்தை அள்ளி தூவியுள்ளார். வெய்யோன் சில்லி நிலத்தில் இறங்கி அனத்துறா என தொடங்கும் பாடல் மற்றும் சூர்யா, அபர்ணாவின் ரியாக்ஷன்கள் அட்டகாசம்.


Click it and Unblock the Notifications











