சொல்லி அடிச்ச சூர்யா.. நடுவானில் ரிலீஸான வெய்யோன் சில்லி.. வேற லெவல் புரொமோ வீடியோ!
சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி பாடல், அறிவித்த படி நடுவானில் வெளியானது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகி உள்ள ரொமான்டிக் பாடலான வெய்யோன் சில்லி பாடல் ரிலீசாகி உள்ளது.
விமானத்தில் இதுவரை பறந்திடாத 70 குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என 100 பேரை அழைத்துக் கொண்டு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வானில் பறந்த படி, வெய்யோன் சில்லி பாடல் வெளியானது.
வரும் ஏப்ரல் மாதம் சூரரைப் போற்று படம் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படியொரு பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா, படத்திற்கான மிகப்பெரிய புரொமோஷனாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
சூர்யாவின் சூரரைப் போற்று ஆடியோ லான்ச் வெளியாகி உள்ள நிலையில், காலையில் இருந்தே வெய்யோன் சில்லி ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாள மையம் படத்தில் நாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி, வெய்யோன் சில்லி பாடலில், அவ்வளவு அழகாக இருக்கிறார்.
நடிகர் சூர்யா தற்போது, அந்த பாடல் வீடியோ லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











