நடுவானில் ஆடியோ லான்ச்.. சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சி.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்!

Recommended Video

Soorarai Pottru - Veyyon Silli Second Single | Sudha Kongara | Surya

சென்னை: சூரரைப் போற்று இசை வெளியீட்டு விழா நடுவானில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக சென்னை விமான நிலையத்தில் நடிகர் சூர்யா, சுதா கொங்கரா, மற்றும் வானில் பறக்க உள்ள குழந்தைகள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

சூரரைப் போற்று படத்தின் செகண்ட் சிங்கிளான வெய்யோன் சில்லி பாடல் இன்று வெளியாகவுள்ள நிலையில், #VeyyonSilliLaunchMidAir என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கோட் சூட்டில் சூர்யா

சூரரைப் போற்று படத்தின் செகண்ட் சிங்கிளான வெய்யோன் சில்லி பாடல் ரிலீசுக்காக கோட் சூட்டில் நடிகர் சூர்யா கெத்தாக வந்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படத்தில் மாரா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். கோட் சூட்டில் ஆடியோ லாஞ்சுக்கு வந்துள்ள சூர்யாவின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

போர்டிங் பாஸ்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறந்த படி நடுவானில் நடைபெற உள்ள சூரரைப் போற்று இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருக்கும், பிரபலங்கள் தங்களுக்கு கிடைத்துள்ள போர்டிங் பாஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டோ எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். சூர்யா ரசிகர்கள் அதனையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குழந்தைகள்

இதுவரை விமானத்தில் பறக்காத 70 குழந்தைகளை அழைத்துக் கொண்டு விமானத்தில் இந்த இசை வெளியீட்டு விழா புதிய முயற்சியாக நடைபெற உள்ளது. விமானத்தில் ஏறப் போவதை அறிந்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக விமானத்தை ஆச்சர்யத்துடன் பார்க்கும் புகைப்படங்கள், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

விமானத்துக்குள்

ஒவ்வொரு விமான சீட்டிலும், சூர்யாவின் சூரரைப் போற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் வேற லெவலில் முதல் முறையாக நடைபெற உள்ள இந்த ஆடியோ லாஞ்சை தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமாவே திரும்பி பார்த்து வருகிறது. இதனால், சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.

சிவகுமார் வருகை

சூரரைப் போற்று இசை வெளியீட்டு விழாவுக்கு, நடிகர் சிவகுமார் வருகை தந்துள்ளார். ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஜி.வி. பிரகாஷ், சுதா கொங்கரா, மோகன் பாபு மற்றும் பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

ஃபிளைட் மாடல்

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் நடுவானில் உலகமே கண்டு வியக்கும் அளவுக்கு நடைபெற உள்ளது. தர்பார் படத்துக்கு, சூர்யாவின் போஸ்டர் ஒட்டிய விமானம் வானில் பறக்கவுள்ளது. அதற்கான மாடல் விமானத்தின் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X