RRR படத்தை 12 முறை பார்த்த பிரபலம்.. VFX கலைஞர் ஸ்ரீனிவாஸ் மோகனின் ஆர்ஆர்ஆர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் கற்பனை காட்சிகளை கண்முன்னே கொண்டு காட்டியதில் முக்கிய பங்கை ஆற்றியவர் VFX கலைஞர் ஸ்ரீனிவாஸ் மோகன்.

Recommended Video

RRR Review | ரெண்டு பேறும் தாறு மாறு performance | Ram Charan | NTR | SS Rajamouli

ஷங்கரின் எந்திரன் படத்திற்கும் இவர் தான் VFX சூப்பர்வைசர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படம் குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கும் விமர்சனம் டிரெண்டாகி வருகிறது.

ராஜமெளலி ஏமாற்றவில்லை

ராஜமெளலி ஏமாற்றவில்லை

சமீப காலமாக பெரிய படங்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் புரமோட் செய்யப்பட்டு படம் வந்த பிறகு ரசிகர்களை ரொம்பவே சோதித்து வந்த நிலையில், சொல்லி அடிச்ச கில்லியாக இயக்குநர் ராஜமெளலி RRR படத்தின் மூலம் ரசிகர்களை ஏமாற்றாமல் மெய்சிலிர்க்க வைத்துள்ளார் என படம் பார்த்த பலரும் பாசிட்டிவ் கமெண்ட்டுகளை சொல்லி வருகின்றனர்.

ஸ்ரீனிவாஸ் மோகன்

ஸ்ரீனிவாஸ் மோகன்

இந்திய சினிமாக்களின் பிரம்மாண்ட படங்களுக்கு விஎஃப்எக்ஸ் செய்து சிஜி காட்சிகளை தத்ரூபமாக காட்டி வரும் ஸ்ரீனிவாஸ் மோகன் தான் இந்த படத்திற்கும் பல வித்தைகளை காட்டியிருக்கிறார். எந்திரன் படத்தில் அத்தனை சாகசங்களை செய்த இவர் ஆர்ஆர்ஆர் படத்தில் புலி, நரி என ஏகப்பட்ட காட்டு விலங்குகளையும் நீரையும் நெருப்பையும் காட்சி படுத்திய விதம் வேற லெவல் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

12 முறை

12 முறை

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை 2டி, 3டி, ஐமேக்ஸ், அட்மாஸ், என அனைத்து ஃபார்மேட்களிலும் ஒட்டுமொத்தமாக முழு படத்தையும் 12 முறை பார்த்துள்ளேன் எனக் கூறியுள்ளார். மேலும், ஆர்ஆர்ஆர் படம் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு விஷுவல் ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது என்கிற விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார்.

3டி வேண்டாம்னு சொன்னேன்

3டி வேண்டாம்னு சொன்னேன்

இயக்குநர் ராஜமெளலி இந்த படத்தை 3டியிலும் ரிலீஸ் பண்ண வேண்டும் என சொல்லும் போது, இந்த படத்திற்கு ஏன் 3டி என கேட்டு வேண்டாம் என சொன்னேன். ஆனால், அதன் பிறகு அவருடைய டீம் கொடுத்த விளக்கத்திற்கு பிறகு அதன் 3டி விஷுவல்ஸை பார்க்கும் போது தான் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடிப்பை கண்களுக்கு அருகே பார்க்கும் போது தான் நான் நினைத்தது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

பிரம்மாண்ட பிஜிஎம்

பிரம்மாண்ட பிஜிஎம்

படத்திற்கு ஒட்டுமொத்த பக்க பலமாக இருப்பது இசையமைப்பாளர் மரகதமணியின் பிஜிஎம் தான். பாகுபலி படத்திற்கு போட்டதை போலவே இந்த படத்திற்கும் எந்த இடத்தில் இசை இருக்க வேண்டும், எந்த இடத்தில் இருக்கக் கூடாது எங்கே உணர்ச்சிகளை தூண்ட வேண்டும் என விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு இணையாக பிஜிஎம் போட்டுள்ளார் என்றும் பாராட்டி உள்ளார் ஸ்ரீனிவாஸ் மோகன்.

800 கோடி வரை

800 கோடி வரை

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஸ்க்ரீன்களில் வெளியாகி உள்ளன. மேலும், முதல் நாளே 230 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், முதல் வாரத்திலேயே 700 முதல் 800 கோடி வரை வசூல் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X