twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உத்தம வில்லனுக்கு தடை விதிக்க வேண்டும் - போலீஸ் கமிஷனிடம் மனு!

    By Shankar
    |

    இந்து மதக் கடவுள்களை விமர்சித்துள்ளதாகக் கூறப்படுவதால் கமல் ஹாஸன் நடித்த ‘உத்தமவில்லன்' படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு தரப்பட்டுள்ளது.

    கமல் நடித்துள்ள உத்தம வில்லன் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் இந்துக் கடவுள்களுக்கு எதிரான விமர்சனம் உள்ளதாக திடீரென கிளம்பியுள்ளது விஸ்வ இந்து பரிஷத்.

    VHP lodges complaint to ban Uthama Villain

    இதுகுறித்து அந்த அமைப்பின் சென்னை மாநகர பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனு:

    ‘உத்தம வில்லன்' படத்தில் கடவுளின் பெருமாள் அவதாரங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. பக்த பிரகலாதன் மற்றும் தந்தை இரணியன் இடையிலான உரையாடலை வில்லுப்பாட்டாக உதிரத்தின் கதை எனத் தொடங்கும் பாடலில் சேர்த்துள்ளனர்.

    இதில் பெருமாள் அவதாரத்தை கொச்சைப்படுத்துவதுபோல் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்து மதத்தை எதிர்க்கும் நாத்திகனாக தன்னை காட்டிக் கொள்ளும் கமல் இந்து கடவுளை விமர்சித்து இருப்பது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Vishwa Hindu Parishat has lodged a complaint to ban Kamal's Uthama Villain which scheduled to release this month.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X