பீஸ்ட்க்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா... மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு

சென்னை : நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் வசூலில் சிறப்பாக காணப்படுகிறது. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் படக்குழுவினருக்கு சக்சஸ் பார்ட்டி கொடுத்துள்ளார்.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது பீஸ்ட். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வசூல் சாதனையில் பீஸ்ட்

வசூல் சாதனையில் பீஸ்ட்

ஆயினும் விஜய்யின் முந்தைய படங்களை போலவே இந்தப் படமும் வசூல் சாதனை புரிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இதுகுறித்து சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது. இந்தப் படத்தின் வசூல் சாதனையை அடுத்து நெல்சன் மற்றும் விஜய் மீண்டும் இணைந்து படம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சக்சஸ் பார்ட்டி கொடுத்த விஜய்

சக்சஸ் பார்ட்டி கொடுத்த விஜய்

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் தனது வீட்டில் சக்சஸ் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்தக் கொண்டாட்டத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதன் புகைப்படத்தை நெல்சன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேக்கிங் வீடியோ

மேக்கிங் வீடியோ

தொடர்ந்து அபர்ணா தாசும் பீஸ்ட் படத்தின் பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன. இந்நிலையில் சன் டிவியும் தன்னுடைய பங்கிற்கு பீஸ்ட் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

படத்தின் மால் செட்

படத்தின் மால் செட்

படத்தில் இடம் பெற்றுள்ள மால் படத்தில் முக்கியமான பங்கு வகித்துள்ளது. விஜய் போன்ற நடிகரை வைத்து மாலில் இந்தக் காட்சிகளை எடுக்க முடியாது என்பதால் மால் செட்டை படக்குழு முன்னதாக வடிவமைத்தது. இதை கலை இயக்குநர் கிரண் செய்திருந்தார். இதற்கென லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாலை வடிவமைத்ததாக அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பிரத்யேக லைட்டிங்

பிரத்யேக லைட்டிங்

படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜும் இந்த மாலை படத்தில் சிறப்பாக பயன்படுத்தும் வகையில் எத்தகைய லைட்டிங்கை பயன்படுத்தினோம் என்பது குறித்து வீடியோவில் பதிவு செய்துள்ளார். படத்தில் சாதாரண லைட்டிங்கை பயன்படுத்துவதில் இருந்த சிக்கலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X