மீண்டும் மீண்டுமா? நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் அதிரடி சண்டைக் காட்சி ஸ்டில் லீக்!
சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன.
ஏற்கனவே ஒரு பெரிய தோட்டம் போன்ற வீடு செட்டில் நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து படக்குழுவுக்கு பெரும் தலைவலியை கொடுத்தன.
இந்நிலையில், மற்றொரு பிரத்யேக சூட்டிங் ஸ்பாட் காட்சி லீக்காகி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் டைட்டில் வாரிசு என அறிவிக்கப்பட்டு மூன்று புதிய போஸ்டர்களும் வெளியாகின. இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, மெஹ்ரீன் பிர்சடா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சர்கார், பீஸ்ட் படங்களை தொடர்ந்து யோகி பாபு காமெடியனாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

காட்சிகள் லீக்
நடிகர் விஜய் படங்கள் என்றாலே எத்தனை கட்டுப்பாடுகள் போடப்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் லீக் ஆகி வருவது சகஜமாகவே மாறிவிட்டன. பீஸ்ட் படத்தின் மால் செட்டில் ரத்தக் கறையுடன் இருந்த விஜய்யின் புகைப்படம் லீக் ஆகி தான் கதையே மாலில் தான் நடக்கிறது என்பது உறுதியானது. அதே போல வாரிசு படத்தின் காட்சிகளும் முன்னதாக வெளியான நிலையில், வேறு இடத்திற்கு சூட்டிங் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

சண்டைக் காட்சி
பைக்கில் வந்த ஒரு நபரை தள்ளி விட்டு நடிகர் விஜய் அவருடன் மோதும் காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து டிரெண்டாகி வருகிறது. லீக் ஆகும் காட்சிகள் எல்லாம் அதிரடி சண்டைக் காட்சிகளாக உள்ள நிலையில், படம் பூவே உனக்காக பாணியில் இருக்குமா? அல்லது பீஸ்ட் பாணியில் அதிரடி ஆக்ஷனாக இருக்குமா? என்கிற கேள்வியும் எழுகிறது.

கதை இதுதானா
வெளிநாட்டில் வாழும் விஜய் சொந்த ஊரில் தனது அப்பாவை கொன்ற உறவினர் யார்? என்பதை கண்டு பிடிக்க வரும் கதை தான் என்றும், ஹாலிவுட் படமான லார்கோ வின்ச் படத்தின் காப்பி தான் என்றும் பிரபாஸின் சாஹோ படமே ஏற்கனவே அந்த படத்தைத் தழுவி தான் எடுக்கப்பட்டதாகவும் ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பி வருகின்றன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் டீசர் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











