Bigg Boss 7 - அனன்யா உடம்பில் இருக்கும் டாட்டூவை காட்ட சொன்ன விசித்திரா.. அய்யயோ அடுத்த பஞ்சாயத்தா?

சென்னை: Bigg Boss Vichithra (பிக்பாஸ் விசித்திரா) பிக்பாஸில் அனன்யாவிடம் சென்ற விசித்திரா உடம்பில் குத்தப்பட்டிருக்கும் டாட்டூவை காட்ட சொல்லியிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி நடைபெற்றுவருகின்றது. 100 நாட்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதன் அடிப்படையில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்‌ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் போட்டியிட்டிருக்கின்றனர். தொலைக்காட்சியில் மட்டுமின்றி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுகிறது.

Vichithra asked Ananya to show the tattoo on her body in Bigg Boss 7

இரண்டு வீடுகள்: அதேபோல் இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடக்கிறது. அதன்படி கேப்டனை கவர தவறிய ஆறு பேர் முதலில் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதனையடுத்து ரூல்ஸை மீறிய இரண்டு பேர் அனுப்பப்பட மொத்தம் இப்போது ஸ்மால் பாஸ் வீட்டில் எட்டு பேர் இருக்கிறார்கள். அவர்களால் எந்த டாஸ்க்கிலும் பங்கேற்க முடியாது; கிளீனிங், சமையல் ஆகியவற்றை அவர்கள்தான் செய்ய வேண்டும்.

பஞ்சாயத்து: நேற்று கூல் சுரேஷ் மாயாவிடம் மூத்த பொண்ணு பீத்த பொண்ணு என பேசியதும் அவர்களுக்குள் ஆரம்பித்த பஞ்சாயத்து விஷ்ணு - மாயா பஞ்சாயத்தாக மாறியது. அதேபோல் கேப்டனுக்கும் பிரதீப்புக்கும் முட்டிக்கொண்டது. மேலும் விசித்திரா உடை குறித்து பேசிய விஷயமும் வீட்டுக்குள் விவாதம் ஆனது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பஞ்சாயத்து: ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்ற பிக்பாஸின் ரூல்ஸை மீறியதால் விசித்திராவும், யுகேந்திரனும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்றவுடன் விசித்திரா ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது அனன்யா தன்னுடைய உடலில் குத்தியிருக்கும் டாட்டூவை காட்டும்படி விசித்திரா கேட்டிருக்கிறார்.

Vichithra asked Ananya to show the tattoo on her body in Bigg Boss 7

முறையிட்ட அனன்யா: இதை எதிர்பார்க்காத அனன்யா தனது டாட்டூவை காட்டிவிட்டு பவா செல்லதுரையிடம் சென்று, "என் உடலில் போடப்பட்டிருக்கும் டாட்டூஸை பற்றி பலரும் இந்த வீட்டில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னைக்கு காலையில்கூட விசித்திரா அம்மா வந்து எனது இடுப்பு பகுதிக்கு பின்னால் குத்தப்பட்டிருக்கும் டாட்டூவை காட்டும்படி கூறினார். என் அம்மா சொல்லியிருக்கிறார் டாட்டூக்களை யாரிடமும் காட்டாதே என்று. ஆனால் அவர் எதற்கு கேட்டார் என்றும் எனக்கு தெரியும். அதனால் வேண்டுமென்றேதான் நான் காட்டினேன்" என்றார்.

முன்னதாக ஆடை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய விசித்திரா இப்போது உடம்பில் குத்தப்பட்டிருக்கும் டாட்டூவை காட்ட சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதனால் இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X