Vichithra - விசித்திரா சொன்ன விஷயம்.. மனமுடைந்து மூத்த மகன் எடுத்த முடிவு.. இப்படி வேற நடக்குதா?

சென்னை: Bigg Boss Vichithra (பிக்பாஸ் விசித்திரா) விசித்திரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேசியதை அடுத்து அது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் விசித்திரா மற்றும் அர்ச்சனா ஆகியோர் விளையாடும் முறையும்; அவர்கள் செய்யும் செயலும் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக விசித்திரா ஒவ்வொரு நாளும் கண்ட்டெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Vichithra Husband talsk about Vichithras Latest Issue

பூகம்பம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் பூகம்பம் டாஸ்க் வழங்கப்பட்டது. முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்தபோது அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொள்வதற்காக முதல் நாள் சென்றேன். ஆனால் அவரோ என் பெயரைக்கூட கேட்காமல் இன்னைக்கு நைட் என் ரூமுக்கு வந்துடு என்றார். நான் அன்றைய இரவு அவர் ரூமுக்கு செல்லாமல் என்னுடைய ரூமுக்கு வந்து தூங்கிவிட்டேன். அதற்கு பிறகு அவருடைய ஆட்கள் மது அருந்திவிட்டு வந்து எனது அறை கதவை தட்டினார்கள். இதனை கவனித்துக்கொண்டிருந்த அந்த ஹோட்டலின் மேனேஜர் (தற்போது விசித்திராவின் கணவர்) எனக்கு உதவி செய்தார்.

ஒவ்வொரு நாளும் ஒரு ரூம்: அதன்படி அவர் எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமை ஒதுக்கிக்கொடுத்தார். அதனால் நான் எந்த ரூமில் இருக்கிறேன் என ஹீரோவுக்கும் அவருடைய ஆட்களுக்கும் தெரியவில்லை. இதுவும் ஹீரோவுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த சமயத்தில் ஆக்‌ஷன் காட்சி ஷூட் செய்யப்பட்டது. அந்த ஷூட்டிங்கில் சண்டை கலைஞர் ஒருவர் என்னை தவறான முறையில் தொட்டார். நான் சண்டை பயிற்சியாளரிடம் சென்றுமுறையிட்டேன். அவர் என்னை அறைந்துவிட்டார்.

பலேவடிவி பாசு: அந்தப் படத்தின் பெயர் பலேவடிவி பாசு என்றும்; விசித்திராவை அறைந்த ஃபைட் மாஸ்டர் விஜய் என்றும் கூறுகின்றனர். சூழல் இப்படி இருக்க விசித்திரா சொன்ன இந்த விஷயத்துக்கு சனி, ஞாயிறு எபிசோடில் கமல் ஹாசன் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. முக்கியமாக பெண்கள் பாதுகாப்பு என்று பிரதீப் ஆண்டனியை வெளியேற்றிய கமல் இதில் என்ன மாதிரியான கருத்து சொல்லப்போகிறார் எனவும் கேள்வி எழுந்திருக்கிறது,

மகன் முடிவு: இந்நிலையில் விசித்திராவின் கணவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மூத்த மகன் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், "விசித்திரா கூறிய அந்த சம்பவம் ஒரு கசப்பான அனுபவம். அதை மறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அப்படி இருக்கும்போது இதை ஏன் அவர் இப்போது சொன்னார் என்று தெரியவில்லை. அதை பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சிதான். எனது மூத்த மகன் இதனால் மனமுடைந்து கல்லூரிக்கு போகவில்லை. இனிமேல்தான் அவனை சமாதானம் செய்ய வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X