ஆபாசப் படம் போல காட்சியை எடுப்பதா..? அந்த இயக்குனரை பளார் என அறைந்த பிரபல நடிகை.. பகீர் தகவல்!

By

சென்னை: அந்த பிரபல இயக்குனரை பளார் என்று அறைந்ததாக பிரபல நடிகை விசித்திரா தெரிவித்துள்ளார்.

செல்வா இயக்கிய 'தலைவாசல்' படம் மூலம் பிரபலமானவர் விசித்திரா. இவர், இதில் மடிப்பு அம்சா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் அவர் பிரபலமடைந்தார். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ள விசித்திரா, இப்போது நடிக்கவில்லை.

கிளாமர் வேடங்கள்

கிளாமர் வேடங்கள்

தமிழில், சின்னத்தாயி, தேவர்மகன், எட்டுப்பட்டி ராசா, முத்து, ரசிகன், கிழக்கும் மேற்கும், எல்லாமே என் பொண்டாட்டிதான் உள்பட பல படங்களில் கிளாமர் வேடங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக இரவுபாடகன் படத்தில் நடித்திருந்தார்.

அப்படி நடித்துள்ளேன்

அப்படி நடித்துள்ளேன்

சன் டிவியில் வெளியான வாழ்க்கை, ராசாத்தீ தொடர்களிலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குனர் ஒருவரை அறைந்ததாகக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திரைப்படங்கள்ல கிளாமர் தேவைப்பட்டா மட்டுமே அப்படி நடிச்சிருக்கேன்.

வேறுவித பார்வை

வேறுவித பார்வை

மற்றபடி திணிக்கிற மாதிரியான காட்சிகள்ல நடிச்சதில்லை. பொதுவா கிளாமர் நடிகைன்னாலே அவங்களை வேறுவிதமா பார்க்கும் நிலை இருக்கு. இதனால திருமணத்துக்குப் பிறகும் நான் பாதிக்கப்பட்டிருக்கேன். கேமராவுக்கு முன்ன அப்படி நடிக்கிறவங்க அதுக்குப் பின்னாலயும் அப்படித்தான் இருப்பாங்கன்னு நினைக்கிற மன நிலை மாறணும்.

சிக்கல்னு பயம்

சிக்கல்னு பயம்

எனக்கு, ஒரு மலையாள பட வாய்ப்பு வந்தது. அந்த நேரத்துல ஷகிலா நடிச்ச படங்கள்லாம் அங்க நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நான் டைரக்டர் யாரு, கதை சொல்லுங்கன்னு கேட்டேன். கிளாமர் நடிகையை, மலையாளத்துல இருந்து தேடி வந்தா, சிக்கல்தான்னு பயந்தேன்.

பேலன்ஸ் சீன்

பேலன்ஸ் சீன்

அந்த டைரக்டர் நான் மம்மூட்டியை வச்சு படம் பண்ணினவன். என்னையை அப்படி நினைக்காதீங்கன்னு சொன்னார். கிளாமர் டீச்சர் கேரக்டர்னு சொன்னார். ஷூட்டிங் போனேன், டீசன்டான கேரக்டர். முடிஞ்சதும் வந்துட்டேன். ரெண்டு மாசம் கழிச்சு, அதே கம்பெனியில இருந்து வந்து, இன்னும் பேலன்ஸ் சீன் இருக்கு.

போஸ்டர் வந்தால்

போஸ்டர் வந்தால்

நாலஞ்சு நாள் ஷூட்டிங். வந்துட்டு போங்கன்னு சொன்னாங்க. ரொம்ப முக்கியமான காட்சின்னு வேற சொன்னாங்க. சரின்னு போனா, ஒரு குளிக்கிற சீன், ஒரு ரேப் சீன் எடுத்தாங்க. தப்பா எதுவும் இருக்காதுன்னு சொல்லிட்டே எடுத்தாங்க. படத்தோட போஸ்டர் வந்தது. பார்த்தா அதிர்ச்சியா இருந்தது.

ஆத்திரமா வந்தது

ஆத்திரமா வந்தது

அடல்ட் மூவி மாதிரி, ரேப் சீன் போட்டோவை போட்டு வச்சிருந்தங்க. எனக்கு அவ்வளவு ஆத்திரமா வந்தது. வயித்தெரிச்சலா இருந்தது. என்கிட்ட இதெல்லாம் சொல்லாம அவங்க பிசினஸுக்காக, என்னை இப்படி பயன்படுத்திக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில அந்த டைரக்டரை பார்த்தேன்.

பளார்னு ஓர் அறை

பளார்னு ஓர் அறை

கோபம். அவர் காலரை பிடிச்சு பளார்னு ஒரு அறை விட்டேன். இப்படி என்னை அசிங்கப்படுத்திட்டியேன்னு. இன்னைக்கு வரைக்கும் அந்த சீன்தான், பார்ன் சைட் வரை போயிட்டிருக்கு. அதுக்கு இன்னைக்கு வரைக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். இவ்வாறு விசித்திரா கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Read more about: vichithra malayalam director slap
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X