ரவீனா காதல் கன்டென்ட் கொடுக்கத்தான் வந்தியா?.. ஏடாகூடமாக பேசிய பிரதீப்.. விசித்ராவுக்கும் அந்த ஆசை!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே இந்த சீசனில் அதிரடி காட்டி வருகின்றனர். பவா செல்லதுரை இருந்த நிலையில், கமல் எபிசோடு மட்டும் நல்லா இல்லை என விமர்சிக்கப்பட்ட நிலையில், அதிரடியாக அவரையே வீட்டுக்கு அனுப்பி விட்டு 2வது வாரத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எவிக்‌ஷன் இருக்காது என்பதையே விஜய் டிவி வெளிப்படுத்திய நிலையில், வார இறுதியில் சுவாரஸ்யம் இருக்காது என்றும் அந்த ஷோவை புறக்கணித்து விடலாம் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பிரதீப் ஆண்டனி, விசித்ரா உள்ளிட்டோர் ரவீனாவையும் மணியையும் டைரக்ட் அட்டாக் செய்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

Vichitra and Pradeep Antony roasts Raveena and Manichandra with love content

நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தானே என விசித்ரா டைரக்ட்டாக கேட்பதும், காதல் கன்டென்ட் நல்லா கொடுக்கிற ரவீனா என பிரதீப் ஆண்டனி ஏடாகூடமாக பேசியும் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

டாட்டூவை தொடர்ந்து காதல்: விசித்ரா நல்லா படித்து விட்டு பிக் பாஸ் வீட்டுக்கு வந்தாலும், இளம் பெண்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையை விடக் கூடாது என்பதை எங்கேயும் படிக்கவில்லை போலத்தான் தெரிகிறது. அனன்யாவின் டாட்டூவை பார்க்க ஆசைப்பட்டு அவரை வீட்டுக்கே பார்சல் செய்து விட்டார். அடுத்து தற்போது ரவீனாவிடம் நீயும் மணியும் லவ்வர்ஸ் தானே என்று நாகரீகமே இல்லாமல் கேட்கிறார். நாங்க அப்படி சொல்லல நல்ல நண்பர்கள் தான் என அவர் சொல்ல, பார்த்தால் அப்படி தெரியலையே என பேசியுள்ளார்.

அசிங்கப்படுத்தும் பிரதீப் ஆண்டனி: பிக் பாஸ் சீசனில் இப்படியொரு போட்டியாளரை பார்க்கவே முடியாது என்கிற ரீதியில் நீ நல்லவனா? அல்லது கெட்டவனா? என்கிற ரேஞ்சில் பிரதீப் ஆண்டனி கேம் ஆடி வருகிறார். நிக்சன் உடன் அப்படி சண்டை போட்ட பிரதீப் ஆண்டனி தற்போது ரவீனா நல்லா காதல் கன்டென்ட் கொடுத்து ஷோவை ஓட்டுறீயேன்னு ஏடாகூடமாக பேசி அதிர வைத்துள்ளார்.

ரவீனாவையும் மணியையும் இப்படி பேசி பேசியே லவ் பேர்ட்ஸாக மாற்றி விடுவார்களோ என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், காதலித்தால் கூட என்ன தவறு, அது அவர்கள் தனிப்பட்ட விஷயம் அதையெல்லாம் இப்படி கொச்சையாக பிரதீப் ஏன் பேச வேண்டும் என அவரை விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X