»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன்னை கற்பழிக்க முயன்ற ஸ்டண்ட் நடிகர் மீது மனித உரிமைக் கமிஷனிடம் புகார் கொடுத்துள்ளார் கவர்ச்சிப் புயல் நடிகைவிசித்ரா.

தலைவாசல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் விசித்ரா. கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் தெலுங்குப் படப்பிடிப்பில்இருந்தபோது ஸ்டண்ட் நடிகர் விஜய் இவரை தவறான எண்ணத்துடன் அழைத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் சண்டைஏற்பட தனது சக ஸ்டண்ட் நடிகர்கள் உதவியுடன் விசித்ராவை கற்பழிக்க முயன்றார்.

இதையடுத்து விசித்ரா அந்த நடிகர்களை அடித்தார். எனது நண்பர்களை எப்படி அடிக்கலாம் என்று கேட்டுக் கொண்ட விஜய்விசித்ராவை அடித்தார்.

இதையடுத்து படப்பிடிப்பே ரத்தாகிவிட்டது. தன்னை கற்பழிக்க நடந்த முயற்சி குறித்து விசித்ரா நடிகர் சங்கத் தலைவர்விஜயகாந்திடம் தெரிவித்தார்.

இந் நிலையில் விசித்ராவின் வீட்டுக்கு மிரட்டல் தொலைபேசி வர ஆரம்பித்துள்ளது. முகத்தில் ஆசிட் ஊற்றுவோம் எனவும்எச்சரிக்கை வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து பாதூப்பு கேட்டு போலீஸ் கமிஷ்னரிடம் மனு கொடுத்துள்ள விசித்ராஇப்போது மனித உரிமைக் கமிஷனிடத்திலும் புகார் கூறியுள்ளார்.

இவருக்கு அகில இந்திய மாதர் சங்கமும் ஆதரவு தர முன் வந்துள்ளது. விஜய்க்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை தொடர்ந்துபோராடுவேன் எனவும் விசித்ரா அறிவித்துள்ளார்.

Read more about: actor actress cinema movie sexy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil