விஜய் ரசிகர்கள் வயித்தெரிச்சல்.. கத்தி கத்தி தொண்டை போனாலும்.. அஜித் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்
சென்னை: குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்போடு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் விழாகோலம் போல் திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு வினோதமான முறையில் ஒரு பாக்கெட் விக்ஸ் சீட்டில் வைத்து வருவது ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. அதற்கான காரணத்தையும் ரசிகர்களே கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த படம் விடாமுயற்சி. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலை விட கொடுமையாக இருப்பதாகவும், படமே புரியலை என்றும் விமர்சித்தனர். இப்படத்தை இயக்கிய மகிழ் திருமேணி கரியரில் இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு கவனத்தை பெறவில்லை. வசூலிலும் டிசாஸ்டரை சந்தித்தது. ரசிகர்களும் சோதனை முயற்சி என்றும் தெரிவித்தனர். சினிமா விமர்சகர்களும் விடாமுயற்சி தேவையில்லாத பயிற்சி என்றும் விமர்சனம் செய்தனர். அஜித் சொன்ன கதையை நம்பி மகிழ் திருமேணி கோட்டை விட்டுவிட்டார் என்றும் தெரிவித்தனர்.

நட்சத்திர பட்டாளங்கள்: விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் அப்டேட்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஆதிக் ரவிச்சந்திரனின் கேங்ஸ்டர் டிராமா படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாச அனுபவத்தை தரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இப்படத்தில் அர்ஜூன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, த்ரிஷா, ப்ரியா வாரியர், சிம்ரன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரும் மேலும் எதிர்பார்ப்பை எகிற செய்தது.

கலவையான விமர்சனம்: பெரும் எதிர்பார்ப்போடு உருவான குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை அளித்துள்ளனர். சமூகவலைதள பக்கங்களில் படத்தின் காட்சிகளை லீக் செய்து கிரிஞ்சாக இருப்பதாகவும் விமர்சிக்கின்றனர். அர்ஜூன் தாஸ் பிரியா வாரியருடன் நடனம் ஆடியிருக்கும் வீடியோவை பதிவிட்டு என்னப்பா இது வில்லன் டான்ஸ் பயங்கரமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், சுமாரான படம் தான் அதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என்றும் விமர்சிக்கின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை பார்த்து கதற தொடங்கிவிட்டதாகவும் கமெண்ட் செய்கின்றனர். வயித்தெரிச்சலில் விஜய் ரசிகர்கள் இப்படி பொய்யான விமர்சனம் செய்கின்றனர் என்றும் அஜித் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். படத்தை பார்த்த சிலர் ஓகே நல்லா இருக்கு, பட்டாஸ் மாதிரி தெறிக்குது என்றும் தெரிவித்துள்ளனர்.
விக்ஸ் பாக்கெட் பரிசு: சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை பார்த்து கத்தி ஆரவாரம் செய்வார்கள். அப்படி கத்தி கத்தி தொண்டை கரகரத்து போனால் விக்ஸ், ஹால்ஸ் மிட்டாய்கள் வைக்கப்படுகிறது. கத்தி கத்தி தொண்டை போனாலும் விக்ஸ் இருக்க பயமேன் என்றும் தெரிவிக்கின்றனர். கதற தயராக இருக்கவும் என கமெண்ட் செய்கின்றனர். அஜித் படம் ரிலீஸ் ஆகும் ஒவ்வொரு தருணமும் அவரது ரசிகர்கள் இப்படி ஏதாவது வித்தியாசம் காட்டுவது உண்டு. ஆனால், இந்த அளவிற்கு வித்தியாசம் காட்டுவார்கள் என்று தெரியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது புதுசுண்ணே ரொம்ப புதுசு என்றும் கமெண்டில் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











