நுரையீரல் புற்றுநோய்.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!

By

மும்பை: நுரையீரல் புற்றுநோய் காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்பட பலர் திடீரென உயிரிழந்துள்ளனர்.

புபேஷ் குமார் பாண்டியா

புபேஷ் குமார் பாண்டியா

கடந்த சில மாதங்களாக இந்த திடீர் மரணங்கள் சினிமாதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு நடிகர் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் புபேஷ்குமார் பாண்டியா. பிரபல நாடக நடிகர், சினிமாவிலும் நடித்து வந்தார். விக்கி டோனர், பர்மனு, ஹஸாரோன் கவாஹிஷீன் ஐசி உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

தேசிய நாடகப்பள்ளி மாணவரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நுரையீரல் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை மோசமானது. சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் அதிகரித்ததால், அவர் குடும்பத்தினர் தவித்தனர்.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இதையடுத்து அவருடைய நண்பரும் நடிகருமான மனோஜ் பாஜ்பாய், புபேஷ்குமாரின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந்தார். இதை நடிகர் அடில் ஹூசைன், ராஜேஷ் தைலங் ஷேர் செய்திருந்தனர். இதையடுத்து சில சினிமா பிரபலங்கள் உதவி வந்தனர்.

தேசிய நாடகப் பள்ளி

தேசிய நாடகப் பள்ளி

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதை தேசிய நாடகப் பள்ளி, தனது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்தது. 'புபேஷ் குமார் பாண்டியா (முன்னாள் மாணவர், 2201 பேட்ச்) இறந்த செய்தி வருத்தமாக இருக்கிறது. தேசிய நாடகப்பள்ளி குடும்பம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகிறோம் என்று கூறியுள்ளது.

மனோஜ் பாஜ்பாய்

மனோஜ் பாஜ்பாய்

மறைந்த நடிகர் புபேஷ்குமாருக்கு சாயா பாண்டியா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவர் மறைவுக்கு 'அஞ்சான்' வில்லன் மனோஜ் பாஜ்பாய், முகேஷ் சப்ரா, கஜ்ராஜ் ராவ், இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்பட பல திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X