விஜய்யை அடிக்கடி அருகில் பார்ப்பதற்காகவே எஸ்.ஏ.சி.யிடம் உதவியாளராக சேர்ந்த விக்கி
சென்னை: விஜய்யை அடிக்கடி அருகில் பார்ப்பதற்காகவே எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்ததாக விக்கி தெரிவித்துள்ளார்.
புரட்சி இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த விக்கி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கியுள்ளார்.
டிராபிக் ராமசாமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார்.

மகிழ்ச்சி
டிராபிக் ராமசாமி படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸாக உள்ளது. தனக்கு பிடித்த நடிகரின் பிறந்தநாளில் தனது படம் ரிலீஸாவதில் விக்கி மகிழ்ச்சியில் உள்ளார்.

விஜய்
விஜய் அண்ணாவின் தீவிர ரசிகர் விக்கி. விஜய்யை அருகில் இருந்து அடிக்கடி பார்க்கும் ஆசையில் தான் விக்கி எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார்.

சந்தோஷம்
விஜய் அண்ணாவை அடிக்கடி பார்க்கும் மகிழ்ச்சியே தனி என்கிறார் விக்கி. டிராபிக் ராமசாமி படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். இது தான் விக்கி இயக்கியுள்ள முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராபிக் ராமசாமி
வயதான காலத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இல்லாமல் சமூகத்திற்காக போராடி வரும் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரை திரையில் பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











