பாலிவுட் நடிகரை காதலிக்கும் ரஜினி பட நடிகை?
மும்பை: நடிகை மாளவிகா மோகனன் பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலை காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
ரஜினிகாந்தின் பேட்ட படம் கோலிவுட் வந்தவர் மாளவிகா மோகனன். அவரும் பாலிவுட் நடிகர் இஷான் கட்டாரும் காதலிப்பதாக முன்பு பேசப்பட்டது. இந்நிலையில் யூரி படம் புகழ் விக்கி கவுஷலும், மாளவிகாவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
விக்கி, மாளவிகா பற்றி பேச்சு கிளம்ப காரணம் நடிகை ராதிகா ஆப்தே.

ராதிகா ஆப்தே
நடிகையும், மாடலுமான நேஹா தூபியா நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தே கலந்து கொண்டார். எந்த காதல் ஜோடி தங்களின் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என நேஹா ராதிகாவிடம் கேட்டார். அதற்கு ராதிகாவோ, விக்கி ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவர்கள் தான் முன்வந்து தங்களின் காதலை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றார்.

மாளவிகா
ராதிகா ஆப்தே கூறியதை பார்த்தவர்கள் விக்கி கவுஷல் மாளவிகா மோகனனை தான் காதலிக்கிறார் என்று பேசத் துவங்கிவிட்டனர். முன்னதாக விக்கி கவுஷல் நடிகை ஹர்லீன் சேத்தியை காதலித்தார். யூரி படம் வெளியான பிறகு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். விக்கியும், ஹர்லீனும் பிரிவார்கள் என்று பாலிவுட்காரர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் தான் விக்கியின் பெயர் மாளவிகாவுடன் சேர்ந்து அடிபடுகிறது.

சாப்பாடு
விக்கி கவுஷல் குட்டிப் பையனாக இருந்தபோதில் இருந்தே அவருக்கு மாளவிகா மோகனனை தெரியுமாம். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்து வரும் அவர்களுக்கு இடையே தற்போது நெருக்கம் அதிகரித்துள்ளது. இது வெறும் நட்பு அல்ல. விக்கி என்ன தான் பிசியாக இருந்தாலும் மதிய உணவு அல்லது டின்னர் சாப்பிட மாளவிகாவின் வீட்டிற்கு சென்றுவிடுகிறார் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

சகோதரர்
விக்கி கவுஷல் மாளவிகாவை காதலிக்கவில்லை. மாளவிகா ஆண்டுதோறும் விக்கிக்கு ராக்கி கட்டுகிறார். அவர் விக்கியின் ராக்கி சகோதரி. அவர்களுக்கு இடையேயான நெருக்கம் அண்ணன், தங்கைக்கு இடையேயானது மட்டுமே என்றும் கூறப்படுகிறது. இது குறித்து விக்கி அல்லது மாளவிகா தெரிவித்தால் தான் காதல் வதந்தி அடங்கும்.


Click it and Unblock the Notifications











