twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லடாக் சண்டை.. இந்திய வீரர்கள் வீரமரணம்.. ராயல் சல்யூட் வைத்த விக்கி கவுஷல், தமன்னா, விஜய் ஆண்டனி!

    |

    சென்னை: லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில், 20 இந்தியர்கள் வீரமரணம் அடைந்துள்ள செய்தியை அறிந்த திரை பிரபலங்கள் ராயல் சல்யூட் வைத்துள்ளனர்.

    Recommended Video

    Tamannaah Bhatia boredom Video | Exercise, Cooking, Trend Setting • MPL Gaming App

    இந்தியா - சீனா இடையே நடைபெற்று வரும் எல்லை பிரச்சனை சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழர்கள் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள செய்தி நாட்டையே உலுக்கி வருகிறது.

    மோகன்லால் ரசிகர்களுக்கு ஓணம் வந்தாச்சு... இட்டிமணி மேட் இன் சீனா செம கலக்கல்மோகன்லால் ரசிகர்களுக்கு ஓணம் வந்தாச்சு... இட்டிமணி மேட் இன் சீனா செம கலக்கல்

    இந்தியா பதிலடி

    இந்தியா பதிலடி

    சீனாவின் தாக்குதலை தொடர்ந்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தின் தாக்குதலில், 43 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. எல்லைப் பகுதியில் போர் விமானங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன.

    ராயல் சல்யூட்

    ராயல் சல்யூட்

    இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த செய்தியை அறிந்த உரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் ராணுவ வீரராக நடித்த பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் தனது டிவிட்டர் பக்கத்தில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் வைத்துள்ளார். கால்வான் பள்ளத்தாக்கில் சிறப்பாக நமது வீரர்கள் போராடி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தமன்னா ட்வீட்

    தமன்னா ட்வீட்

    விஷாலின் ஆக்‌ஷன் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து அசத்திய நடிகை தமன்னா, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். வீரர்களின் தியாகத்தை நாடு போற்ற வேண்டும் என்றும், அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் ஓம் ஷாந்தி என பதிவிட்டுள்ளார்.

    வீரர்களின் தியாகம்

    வீரர்களின் தியாகம்

    தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். அவர்களின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், இந்திய ராணுவத்துக்கு உறுதுணையாக நான் எப்போதும் இருப்பேன். ஜெய் ஹிந்த் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Indian cinema celebrities like Vicky Kaushal, Tamannaah and Vijay Antony salutes to our brave soldiers who died in the battle with China army.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X