Netflix ல் வெளிவரவுள்ள அடுத்த ஆந்தலாஜி திரைப்படம்!
சென்னை: தமிழ் சினிமாவிலும் ஆந்தலாஜி திரைப்படங்கள் தற்போது வெகுவாக வர தொடங்கியுள்ளன.
Recommended Video
ஆந்தலாஜி திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தர கூடிய வகையில் இருக்கிறது.
தற்போது Netflix ல் வெளிவரவுள்ள அடுத்த ஆந்தலாஜி திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நல்ல வரவேற்பு
தமிழில் வெளியான ஆந்தலாஜி படங்களான சில்லு கருப்பட்டி, புத்தம் புது காலை, பாவ கதைகள், C/O காதல் ஆகியவை பெருவாரியாக ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக சில்லு கருப்பட்டி, பாவ கதைகள் பல ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியது.

Netflix வெளியீடு
இதையடுத்து தமிழில் விக்டிம் எனும் தலைப்பில் ஆந்தலாஜி திரைப்படம் வெளியாகவுள்ளது. சிம்புதேவன், ராஜேஷ் எம், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகிய 4 இயக்குனர்கள் இயக்கும் இந்த ஆந்தலாஜி திரைப்படம் நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

தயாரிப்பு நிறுவனம்
இந்த விக்டிம் ஆந்தலாஜி திரைப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பிரசன்னா, நட்டி என்ற நடராஜ சுப்பிரமணியம், கலையரசன், அமலாபால் போன்ற முன்னனி நடிகர்கள் நடிக்கிறார்கள். ராட்சசன், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த டில்லிபாபு இதனை தயாரிக்கிறார்.

ஆகஸ்டில் நவரசா
ஏற்கனவே மணிரத்னம் தயாரிப்பில் நவரசா ஆந்தலாஜி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள நிலையில் அதை தொடர்ந்து விக்டிம் வெளியாகும் என தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் கூடிய விரைவில் படக்குழு இதனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











