மிஸ் யுனிவர்ஸ் 2024.. வெற்றியாளர் யார்?.. ரன்னர் அப் யார் தெரியுமா?.. இதோ முழு விவரம்

மெக்சிகோ: மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. இதில் டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா என்பவர் பட்டத்தை வென்றார். அவருக்கு உலகம் முழுவதுமிலிருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்ணாண்டா, நைஜீரியாவை சேர்ந்த சிடிமா, தாய்லாந்தை சேர்ந்த சுச்சாட்டா உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தார்கள்.

உலக அளவில் ஃபேமஸான போட்டிகளில் ஒன்று மிஸ் யுனிவர்ஸ். மிஸ் வேர்ல்டு போட்டிக்கு இணையாக இது கௌரவமாக கருதப்படுகிறது. இதில் வென்றுவிட்டால் இந்த பிரபஞ்சத்திலேயே அழகி என்ற பெயரையும், புகழையும் பெறலாம் என்பதால் இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அழகிகள் அந்தப் போட்டியில் பங்கேற்பார்கள்.

miss universe 2024 victoria kjaer 2024

மிஸ் யுனிவர்ஸ் 2024: இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி மெக்சிகோவில் நடந்தது. இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் 5 அழகிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை காண்பித்தார்கள். மேலும் இந்த வருடத்துக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை எந்த நாட்டை சேர்ந்த அழகி தட்டி செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் பலமாகவே எழுந்திருந்தது.

எந்த நாட்டு அழகிகள்: நேற்று நடந்த இறுதிச் சுற்றில் டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா, நைஜிரியாவை சேர்ந்த சிடிமா, தாய்லாந்தை சேர்ந்த சுச்சாட்டா, வெனிசுலாவை சேர்ந்த இலியானா, மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்ணாண்டா ஆகிய ஐந்து அழகிகள் கலந்துகொண்டார்கள். மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடக்கும் மெக்சிகோவிலேயே ஒரு அழகி இறுதிச் சுற்றுக்கு சென்றதால் அந்த நாட்டுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைக்குமா என்ற ஆவலும் அந்நாட்டு மக்களிடையே இருந்தது.

miss universe 2024 victoria kjaer 2024

டென்மார்க் அழகி: ஆனால் நேற்று நடந்த இறுதிச் சுற்றில் டென்மார்கை சேர்ந்த விக்டோரியா கெஜர் தெய்ல்விக் என்ற அழகி மிஸ் யுனிவர்ஸ் 2024 பட்டத்தை தட்டி சென்றார். இவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெல்லும் 73ஆவது அழகி என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வி - பதில் சுற்றில் அவர் தனது திறமையை நிரூபித்ததால் அவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துக்கு தகுதியானவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதுமிருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

ரன்னர் அப்: அவருக்கு அடுத்தபடியாக முதல் ரன்னர் அப் நைஜீரியாவின் சிடிமா, இரண்டாவது ரன்னர் அப் மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்ணாண்டா, மூன்றாவது ரன்னர் அப் தாய்லாந்தை சேர்ந்த சுச்சாட்டா, நான்காவது ரன்னர் அப்பாக வெனிசுலாவை சேர்ந்த இலியானா மர்க்யூஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது அவர்களது புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X