விடாமுயற்சியில் மிரட்டலான லுக்கில் அர்ஜுன்..ஹரோல்ட் தாஸ் போல டம்மி பீஸாக்கிடாதீங்க புலம்பும் பேன்ஸ்!

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தில் நடிக்கும் அர்ஜூனின் மிரட்டலான லுக் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தடம், கலகத்தலைவன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், விடா முயற்சி.

vidaamuyarchi action king arjun mass look photo leaked

இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே அப்போது தொடங்கும் இப்போது தொடங்கும் என செய்திகள் வெளிவந்த நிலையில் கடந்த மாதம் துபாயில் படப்பிடிப்பு தொடங்கியது.

துணிவு: எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த கொண்டு கொண்டிருக்கும் போதே அடுத்த படம் குறித்து பேச்சு எழுந்தது. நயன்தாராவின் கணவர் அஜித்தை வைத்து இயக்குவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், கடைசியில் அது டிராப் ஆனது.

விடா முயற்சி: இதையடுத்து, அஜித்தின் பிறந்த நாள் அன்று அஜித் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு, படத்திற்கு விடா முயற்சி என பெயர் வைக்கப்பட்டது. படம் குறித்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட பல மாதத்திற்கு மேலாக, படம் குறித்து ஒரு அறிவிப்பும் வெளியாகாமல், கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

அபிதாபியில் படப்பிடிப்பு: ஐரோப்பா, லண்டன் பயணத்தை முடித்த கையோடு மகிழ்திருமேனியிடம் முழுக்கதையும் கேட்கப்பட்டு துபாய், அபுதாபி, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. அதிரடி ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் விஸ்வாசம் போல ஒரு எமோஷனல் போர்ஷனும் உள்ளது என கூறப்படுகிறது.

செம மாஸ் லுக்: இந்நிலையில், விடா முயற்சி படத்தில் அஜித் குமாருடன் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இணைந்துள்ளார். அவரின் செம மாஸான ஒரு லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. விடாமுயற்சி படத்தில் இந்த லுக்கில் தான் அர்ஜுன் நடிக்கிறாரா என அஜித் ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

vidaamuyarchi action king arjun mass look photo leaked

புலம்பும் பேன்ஸ்: இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் வாவ் சூப்பர் என்றும், லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தை டம்மியாகி ஆக்ஷன் கிங் அர்ஜூனை அசிங்கப்படுத்திவிட்டார்கள். இந்த படத்திலாவது அவரின் பெயரை காப்பாத்துங்க என்று இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X