VidaaMuyarchi: ஜோடியாக அஜர்பைஜான் கிளம்பிய அஜித், த்ரிஷா... Take Off ஆன விடாமுயற்சி!!
பாகு: கோலிவுட் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
ஆனால், இதுவரை விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமாகிக் கொண்டே வந்தது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜித்தும் த்ரிஷாவும் ஜோடியாக கிளம்பிச் சென்ற போட்டோ வைரலாகி வருகிறது.

ஜோடியாக கிளம்பிய அஜித், த்ரிஷா
அஜித் நடித்த துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி வெற்றிப் பெற்றது. துணிவு கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இதனால், அஜித்தின் 62வது படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளார்.
அதன்படி லைகா தயாரிப்பில் அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் 'விடாமுயற்சி' கன்ஃபார்ம் ஆனது. மேலும் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி விடாமுயற்சி டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல மாதங்களுக்குப் பின்னர் இப்போது தான் அதற்கு விடிவு காலம் பிறந்துள்ளது. அதன்படி விடாமுயற்சி ஷூட்டிங் இன்று முதல் தொடங்கவுள்ளதாம்.
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஆரவ், சஞ்சய் தத், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதில், ப்ரியா பவானி சங்கர் கமிட்டானது ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் தெரியவந்தது. அஜர்பைஜான் நாட்டில் நடக்கவுள்ள விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் படப்பிடிப்புக்காக, பிரியா பவானி சங்கர் அங்கு சென்றுவிட்டார். அஜர்பைஜான் நாட்டு விமான நிலையத்தில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு லீட் கொடுத்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து தற்போது விடாமுயற்சி ஹீரோ அஜித்தும் ஹீரோயின் த்ரிஷாவும் அஜர்பைஜான் நாட்டுக்கு பறந்துள்ளனர். விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ள த்ரிஷா, சில நாட்களாக துபாயில் விசிட் அடித்து வந்தார். அதேநேரம் அஜித் உட்பட இயக்குநர் மகிழ் திருமேனியும் துபாயில் விடாமுயற்சி ஷூட்டிங் பற்றி டிஸ்கஷனில் இருந்துள்ளனர். மகிழ் திருமேனி சில தினங்களுக்கு முன்னரே அஜர்பைஜான் சென்றுவிட்டார்.
இதனையடுத்து அஜித்தும் த்ரிஷாவும் நேற்று ஜோடியாக அஜர்பைஜான் கிளம்பிச் சென்றனர். துபாயில் விமான நிலையத்தில் ஒருவர் பின் ஒருவராக அஜித்தும் த்ரிஷாவும் விமானம் ஏறச் சென்ற போட்டோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அப்போது அவர்கள் இருவருடனும் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதன்மூலம் விடாமுயற்சி படத்தில் த்ரிஷாவும் இணைந்துள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மேலும் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











