VidaaMuyarchi: இதுதானா சார் உங்க டக்.. வெளியானது விடாமுயற்சி அப்டேட்.. மொக்கை வாங்கிய அஜித் ஃபேன்ஸ்
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ரிலீஸ் தேதி பொங்கல் அப்டேட்டாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தற்போது அவர்களுக்கு மொக்கை கொடுக்கும் விதமாக ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது லைகா.
அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்
துணிவு வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 வேகமாக உருவாகி வருகிறது. விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படப்பிடிப்பும் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

ஆக்ஷன் ஜானரில் உருவாகும் விடாமுயற்சியில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர் ஆகியோரும் அஜித்துடன் நடித்து வருகின்றனர். கடந்தாண்டு அஜித் பிறந்தநாளில் ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என படக்குழு அறிவித்தது. அதன்பின்னர் இந்தப் படம் குறித்து எந்த ஒரு அபிஸியல் அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. முக்கியமாக ஷூட்டிங் நடைபெற்று வருவதை கூட இதுவரை அறிவிக்கவில்லை.
வலிமை, துணிவு படங்களைத் தொடர்ந்து விடாமுயற்சிக்கும் ரசிகர்கள் அப்டேட் கேட்டு அட்ராசிட்டி செய்துவருவது குறிப்பிடத்தக்கது. 2024 நியூ இயர் ஸ்பெஷலாக விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இப்போது பொங்கல் ஸ்பெஷலாக எதாவது அப்டேட் வெளியாகாதா என ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்காக பாவப்பட்ட லைகா விடாமுயற்சி படத்தின் ஓடிடி அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக லைகா அறிவித்துள்ளது. தியேட்டர் ரிலீஸூக்குப் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகும் விடாமுயற்சி படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பார்க்கலாம் என அப்டேட் கொடுத்துள்ளது.
பொங்கல் அப்டேட்டாக விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸ் மட்டும் கொடுத்துள்ளது லைகா நிறுவனம். ஆனால், ரசிகர்களோ அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தனர். இதனால் காண்டான அஜித் ரசிகர்கள், "அடேய் இதெல்லாம் ஒரு அப்டேட்டா... எப்படி நம்ம பொங்கல் அப்டேட்... ஒரு போஸ்டராவது விட்டுருக்கலாம்..." என விதவிதமான கமென்ட்ஸ் போட்டு தங்களது வயிற்றெரிச்சலை கொட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











