Vidaamuyarchi Release Date: விடாமுயற்சி ரிலீஸ் தேதியை டிக் செய்த அஜித்... இதுவும் துணிவு ஸ்டைல் தானா
சென்னை: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஏகே 62 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப்படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மே மாதம் இறுதியில் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாம்.
இதனிடையே இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடாமுயற்சி ரிலீஸ் தேதி: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது அவரது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏகே 62 என அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது விடாமுயற்சி என்ற டைட்டிலில் டேக் ஆஃப் ஆகவுள்ளது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குநராக கமிட் ஆன நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. இந்த டைட்டிலை அஜித் ரசிகர்கள் கொண்டாடினாலும், நெட்டிசன்களால் பலவிதமாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேபாளம், பூடான் நாடுகளுக்கு பைக் டூர் சென்றுள்ள அஜித் விரைவில் சென்னை திரும்புகிறாராம். அதன்பின்னர் வரும் 22ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளதாம்.
விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 70 முதல் 90 நாட்களுக்குள் முடிக்க மகிழ் திருமேனி பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஹை பேக்கேஜ் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் விடாமுயற்சி, அஜித் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமையும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னதாக ஏகே 62 படத்தை விஜய்யின் லியோவுடன் களமிறக்க அஜித் முடிவு செய்திருந்தார். ஆனால், விக்னேஷ் சிவன் விலகல், மகிழ் திருமேனி என்ட்ரி, ஸ்கிரிப்ட் பைனலைஸிங் என டைட்டில் அப்டேட்டை வெளியிடவே மே மாதம் ஆகிவிட்டது. அதனால், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட அஜித் ஓக்கே சொல்லிவிட்டாராம். கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா படங்களும் அடுத்தாண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதனால், இந்தாண்டு விஜய்யின் வாரிசுடன் மோதிய அஜித், அடுத்தாண்டு கமல், சூர்யா ஆகியோருடன் மல்லுக்கட்ட ரெடியாகிவிட்டார். அதேநேரம் கமலின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி இரண்டு படங்களுமே லைகா தயாரிப்பில் உருவாவதால் பொங்கல் ரிலீஸில் இது சாத்தியமா எனவும் தெரியவில்லை. ஆனால், மிக குறுகிய காலத்தில் விடாமுயற்சி படத்தை வெளியிட மகிழ் திருமேனி குழுவினர் ரெடியாகிவிட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











