VidaaMuyarchi: அஜித் - த்ரிஷா காம்போ... இதுவரை அப்படி நடந்ததே இல்ல... விடாமுயற்சியில் நடக்குமா..?

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியதாம். இதில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VidaaMuyarchi: Ajith-Trisha pair will join in the climax of the VidaaMuyarchi film

அஜித் - த்ரிஷா ஜோடி இணையுமா?
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி, ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் அஜர்பைஜானில் தான் தொடங்கவுள்ளதாம்.

இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் சென்றுள்ளனர். அதன்படி இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் 70 நாட்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அஜித்தின் ஆக்‌ஷன் சீன்ஸ், அஜித் - த்ரிஷா, அஜித் - அர்ஜுன் ஆகியோருக்கான காட்சிகளை படமாக்க மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில், அஜித் - த்ரிஷா ஜோடி குறித்து ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, அஜித் - த்ரிஷா இணைந்து இதுவரை 4 படங்களில் நடித்துள்ளனர். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித் - த்ரிஷா ஜோடி நடித்துள்ளது. ஆனால் ஒரு படத்தில் கூட அவர்கள் இணைவதாக க்ளைமேக்ஸ் அமையவில்லை என்பதே ரசிகர்களின் பெரும் கவலையாக உள்ளது. இருவரும் காதலிப்பதாக மட்டுமே பார்க்க முடிந்தது. தெரிந்தோ தெரியாமலோ இதுவொரு சென்டிமெண்டாக தொடர்கிறது.

இந்த சோகம் விடாமுயற்சி படத்திலும் தொடரக் கூடாது என ரசிகர்கள் விரும்புகின்றனர். அதாவது அஜித் - த்ரிஷா இருவரும் விடாமுயற்சி படத்திலாவது இறுதியில் மகிழ்ச்சியாக இணைவது போல இருக்க வேண்டும். அவர்கள் பிரிவது மாதிரி விடாமுயற்சி க்ளைமேக்ஸ் இருக்கக் கூடாது என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X