Vidaamuyarchi: விடாமுயற்சி தொடங்கும் போதே மோதலா... அஜித் எப்படி இதுக்கு ஓக்கே சொன்னார்..?
சென்னை: துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம்.
அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக விடாமுயற்சி டைட்டில் அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருந்தது.
ஆனாலும், இதுவரை படப்பிடிப்பு தொடங்காத நிலையில் தற்போது அதுகுறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

மோதலில் தொடங்கும் விடாமுயற்சி
அஜித்தின் ஏகே 62 அப்டேட் அவரது பிறந்தநாள் தினத்தில் வெளியானது. அதன்படி மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆனது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அஜித்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் விக்னேஷ் சிவனின் ஸ்க்ரிப்ட் ஒர்க் பிடிக்கவில்லை என்பதால் அவரை இப்படத்தில் இருந்து நீக்கிவிட்டனர்.
இதனையடுத்து ஏகே 62 இயக்குநராக மகிழ் திருமேனி கமிட்டாக, படத்தின் டைட்டில் விடாமுயற்சி என அபிஸியல் அப்டேட்டும் வெளியானது. அதேபோல், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதும் உறுதியானது. விடாமுயற்சி அப்டேட் வெளியான போது அஜித் நேபாளம், பூடான் நாடுகளில் பைக் ட்ரிப் செய்துகொண்டிருந்தார். விடாமுயற்சி படப்பிடிப்புக்காக சென்னை திரும்பிய அஜித், தற்போது கேரளாவின் வயநாடு பகுதிகளில் ரவுண்டு அடித்து வருகிறார்.
ஆனால், விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கியதாக தெரியவில்லை. ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்ட மகிழ் திருமேனி, படப்பிடிப்புக்குத் தேவையான ஷெட்யூலையும் பிக்ஸ் செய்துவிட்டாராம். அதன்படி, இந்தப் படத்தை 120 நாட்களுக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதற்குள் அஜித்தும் சென்னை திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக விடாமுயற்சி முதற்கட்ட படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்க பிளான் செய்துள்ளார் மகிழ் திருமேனி. அஜித் நடிக்கவுள்ள இந்த சண்டைக் காட்சிகள் ரொம்பவே பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக சென்னையிலேயே செட் போடப்பட்டு ஷூட்டிங் செல்ல ரெடியாகிவிட்டார் மகிழ் திருமேனி. முதலிலேயே ஆக்ஷன் காட்சிகளை முடித்துவிட்டால் மற்ற காட்சிகளை அடுத்தடுத்து வேகமாக எடுத்துவிடலாம் என மகிழ் திருமேனி ஷெட்யூல் செய்துள்ளார்.
விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. அதனால் இரண்டுவிதமான மாஸ் லுக்கில் அஜித்தை இந்தப் படத்தில் பார்க்கலாம் எனத் தெரிகிறது. ஒரு கெட்டப் வழக்கமாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலும், இன்னொன்றில் மிக இளமையாக இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகும் விடாமுயற்சி, நிச்சயமாக அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என படக்குழுவினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











