VidaaMuyarchi: டைம் ஓவர்... மீண்டும் ஜாலியாக கிளம்பிய அஜித்... காத்திருக்கும் விடாமுயற்சி டீம்!
சென்னை: விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருந்த அஜித், கடந்த மாதம் இறுதியில் சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில் மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கவிருப்பதால், தற்போது அஜித்துக்காக படக்குழு காத்திருக்கிறது.

ஜாலியாக கிளம்பிய அஜித்
அஜித்தின் 62வது படமாக உருவாகி வருகிறது விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார், அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடைசி நேரத்தில் ஏகே 62 இயக்குநர் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது.
வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன் என அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்க, யாருமே எதிர்பார்த்திடாத மகிழ் திருமேனி இந்தப் படத்தில் இணைந்தார். ஃபீல்ட் அவுட்டாகியிருந்த அருண் விஜய்க்கே சூப்பர் ஹிட் படங்கள் மூலம் கம்பேக் கொடுக்க வைத்தவர் மகிழ் திருமேனி. இதனால் அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியும் செம்ம மாஸ் காட்டும் என சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகும் விடாமுயற்சி, அஜித் ரசிகர்களுக்கு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டில் கடந்த மாதம் தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்றது. அதனையடுத்து கடந்த சில தினங்களாக பிரேக் விடப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதுவும் அஜர்பைஜான் நாடு உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து விடாமுயற்சி படக்குழு அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங்கிற்காக காத்திருக்கிறது.
இந்த ஷெட்யூல் தொடர்ச்சியாக 70 நாட்கள் வரை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் இருந்து அஜர்பைஜான் கிளம்பினார் அஜித். கடந்த இரு வாரங்களாக தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட அஜித், அவரது மகன் ஆத்விக்குடன் ஃபுட்பால் விளையாடி மகிழ்ந்தார். அதேபோல், சென்னை மழை வெள்ளத்தின் போது அமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோருக்கும் உதவி செய்திருந்தார்.
இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்ற அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, அப்போது ரசிகர்களும் அஜித்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு ஸ்பெஷலாக டிசம்பர் 31 மாலை அல்லது ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் தளபதி 68 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கும் ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











